

ஒரு பெரும் வியாபாரி அந்த ஜோசியரிடம் வந்தார். அவர் முழு வியாபாரமும் நஷ்டம். அதனால் ஏகப்பட்ட கஷ்டம். வேறு வழி தெரியவில்லை. நம் ஜாதகம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். அதற்கு தகுந்த படி ஒரு நல்ல முடிவாக எடுக்கலாம் என்ற நம்பிக்கையுடன் ஜோசியரை பார்க்க வந்தார்.
ஜாதகத்தை வாங்கியவர் அதை கீழே வைத்து விட்டு அவரே பேச ஆரம்பித்தார்.
"என்னய்யா உலகம் இது. மானம் கெட்ட உலகம். கேடு கெட்ட உலகம். அக்கிரமம் செய்யறவன் ஓகோன்னு வாழறான். நேர்மையாளன் மனம் வெம்பி சாகறான். எது எடுத்தாலும் நஷ்டம். ஏன்டா இந்த உலகத்துல பொறந்தோம்னு இருக்கு. நண்பனும் ஏமாத்தறான். அண்ணன் தம்பிகளும் ஏமாத்தறானுவ. உதவின்னு கேட்டா நண்பர்களும் உறவுகளும் ஓடிப்போயிடறானுவ. எது தொட்டாலும் உருப்படவே மாட்டேங்குது. இன்னிக்கு ஒரு நம்பிக்கையா ஏதாச்சும் நாலு காசு கிடைக்கும்னுட்டு கடை திறந்தா ஒண்ணு ஏதாச்சும் ரெண்டு கட்சி காரங்க போக்கிரிதனத்தால ரோடுலயே அடிச்சி சாகறானுங்க. அதுக்கு நம்ம கடையை அடைக்க வேண்டியிருக்கு.