

‘கதை சொல்லுதல் மட்டுமல்ல, வாழ்க்கையை அர்த்தப்படுத்துவதும், சமூகத்திற்கு ஒரு புதிய புரிதலை அளிப்பதுவுமே ஒரு கதாசிரியனின் நோக்கமாக இருக்க வேண்டும்’ என்று சொல்வதோடு நிற்காமல், அதை தனது கதைகளில் வெளிப்படுத்திக்காட்டி, திரையுலகில் ஒரு நன்மதிப்பைப் பெற்றிருந்தார் மகராசன்.
"மகராசன் சார்… வாங்க, குட்மார்னிங்! "
வரவேற்ற அந்த இளைஞனை, அவர் உற்றுப்பார்த்தார்.
"சார்... நான் ரிஷி. ராகேஷ்சாரோட அசிஸ்டென்ட்."
"குட்மார்னிங்! ராகேஷ் உள்ளே இருக்கிறார் தானே?"
"சார் எங்க ப்ராஜெக்ட் டீமோட ஒரு சின்ன டிஸ்கசன்ல இருக்கிறார். நீங்க வந்ததும் சொல்லச் சொன்னார். இங்க உட்காருங்க. நீங்க வந்துட்டீங்கன்னு சொல்லிட்டு வறேன்."
அவன், அங்கேயிருந்த சோபாவில் அவரை உட்கார வைத்து விட்டு,
"சார்... நான் உங்களோடு தீவிரமான ரசிகன். உங்களை நேர்ல பார்த்ததில எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. என்ன சாப்பிடறிங்க!?"
"ஓஓ... அப்படியா... சந்தோசம். நடிகர் நடிகைக்குத்தானே தீவிரமான ரசிகர்கள் இருக்காங்க! என்னை மாதிரி கதாசிரியனுக்குமா?! ஹா.. ஹா" என்று சிரித்தபடியே சொல்லிவிட்டு,