

அது பாண்டியன் எக்ஸ்பிரஸ். மதுரையிலிருந்து சென்னைக்கு வரும் ரயில்.
அவசர அவசரமாக ஏறிய அந்த இளைஞன், அவர் பக்கத்தில் வந்து,
"இது எஸ் 5 கோச் சீட் நம்பர் 41 தானே”?
“ஆமாம் “ என்றார். அவர்.
“அப்படியானால் அது என் சீட், உங்கள் இருக்கை 48 எதிரில் உள்ளது.”
“ஓ... சாரி”
“ஆனாலும் பரவாயில்லை உட்காருங்கள். நான் உங்கள் இருக்கையில் அமருகிறேன்” என்றான் அந்த இளைஞன்.
“ஹலோ சார்! இந்த ரயில் சிநேகங்கள் மீது நம்பிக்கை உண்டா சார்?" சட்டென அந்தக் கேள்வியைக் கேட்டான் அந்த இளைஞன்.
“எனக்கும் நம்பிக்கை இல்லை தான். ரயில் பிரயாணங்கள் முடியும் வரை தான். அப்புறம் நீ யாரோ நான் யாரோ என்பது போலத் தான்” என்றார்.
பேசிக்கொண்டே இருந்தவன், தன் பையிலிருந்து 'கருமேகம் கலைந்த பொழுதுகள்' என்ற கதைத்தொகுப்பினை எடுத்தான்.