

வாழ்க்கையை ஒரு புதிய பரிமாணத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறேன், கடந்த மூன்று நாட்களாய். அதாவது நகரின் அதி நவீனமான இந்த கிளீனிக்கில் சேர்ந்த நாள் முதலாய். நேரம் போகாமல் பால்கனியில் நின்று உள் வாசலின் நடமாட்டங்களை கவனித்தேன்.
டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு செல்லும் ஒரு நோயாளியின் உறவினர் கொடுத்த பணத்தை வாங்கியதும் ரூம் பாயின் முகத்தில் அடித்து பரவிய சந்தோஷ பிரகாசம் என் பேங்க் பாலன்ஸ் எனக்கு ஏற்படுத்தியதில்லை. நான் முனைவர் பட்டம் வாங்கும் போதும் எனக்கு அப்படி வந்ததில்லை. முதன் முதலாய் நான் வெளிநாடு சென்ற போதும் அப்படி ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டதில்லை. என் கம்பெனியின் 'ஷேர் வேல்யூ' மிக கணிசமாக உயர்ந்த போதும் எனக்கு ஏற்பட்டதில்லை அந்த மகிழ்ச்சி.