கவிதை: விழிகள் பார்த்துப் பேசு!

Kavithai...
Kavithai...Image credit - pixabay
Published on

ன்னும் கூட உயரம் செல்

இணையாய் மேகங்கள் உலவட்டும்

உனதருகே சக மனுசியாய்

பெண்ணும் நடக்கட்டும்

உடை தாண்டி 

உள்ளுறுத்துப் பார்க்கும் 

பார்வை மாற்று

நேர்கொண்ட பார்வையதில்

நெஞ்சம் திருத்து

எது வலி? எது தேவை?

தெரிந்தே பேசு

நான்தானே பெண்ணடிமை

போக்க வந்த தேவதூதன்

என்றெண்ணும் எண்ணம்

ஏதும் கொள்ள வேண்டாம்,

காதலொன்றே இறுதியென்று

காத்திருக்கத் தேவையில்லை

உணர்வதுவால் 

ஒன்றிவிட்டால்

நடிக்க வேண்டாம்.

காதலொன்றும் 

விசத்தையொத்த

விடயமல்ல,

பெண்ணவளை

போகமென்று

சித்தரிக்கும் 

பேதை உலகில்

மென்மையென்றும்,

வன்மையென்றும்

பேதம் வேண்டாம்,

மானிடா...

இன்னும் கூட உயரம் செல்

பண்பட்ட நாகரீகம் உனதாகட்டும்

இன்னொரு பாலினத்தை 

இணையாய் எண்ணி 

இயல்பாய் வாழ்ந்திடு

மேகங்கள் பார்த்து நட

விழிகளைப் பார்த்துப் பேசு!

-மகாலிங்கம் இரெத்தினவேலு,

மதுரை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com