சிறுகதை: கிழக்கும் மேற்கும்!

ஓவியம்; மகேஸ்
Short Story in Tamil
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on
Kalki Strip
Kalki Strip

- பிருதிவிராஜ்

டிராலியில் சூட்கேஸை வைத்து, தள்ளிக்கொண்டு வெளியே வந்தான் சுந்தர். சென்னையின் வெக்கையை உணர்ந்தான். கனடாவில் வெளியே போக வேண்டு மென்றால் ஜீன்ஸ், ஜாக்கெட், க்ளவ்ஸ், தொப்பி, பாதி கால் உயரத்திற்கு ஷூ போடவேண்டும். அப்போதுதான் குளிர் தாங்கும். எனவே சுந்தருக்கு வெக்கை கஷ்டமாக இருந்தது. டிரைவர் ராஜன் மட்டும் வாசலில் நின்றுகொண்டிருந்தான்.

"அம்மாவுக்கு வரமுடியவில்லை. அதான் என்னை அனுப்பினாங்க" என்றான். சுந்தர் காரில் ஏறி உட்கார்ந்தான்.

"என்னப்பா! தமிழ்நாட்டு ஜனங்க மாறி, மாறி வோட்டுப் போடறாங்க"

"ஜனங்க ஒரே மாதிரிதான் வோட்டுப் போடறாங்க. அரசியல்வாதிங்கதான் மாறிக்கிட்டேயிருக்காங்க. அது வெளியேயிருந்து பார்க்கற உங்களுக்கு ஜனங்க மாறுவதுபோல தோணுது" என்றான்.

சுந்தர் சிரித்தான்.

"ஆமா! உங்க ஊரு கிளிண்டன் மோனிகா லூவின்ஸ்கி விவகாரம் என்னானது?"

"அது எங்க ஊரு இல்ல. பக்கத்து ஊரு!"

"எங்களுக்கு கனடா, அமெரிக்கா எல்லாம் ஒண்ணுதான்" என்றான் ராஜன்.

சுந்தருக்கு இந்த விஷயம் படு ஆச்சரியமாக இருந்தது. இது நம்மூர் ஸ்பெஷாலிட்டி என்று சொல்லலாம். சென்னையில் பன்னிரண்டாம்கிளாஸ் படித்து விட்டு கார் ஓட்டும் ராஜனுக்கு, உலக விவரங்கள் தெரிந்திருக்கிறது.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com