“கிளம்பு” ஆனந்தன் சொல்ல, அவள் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அறைக்கதவு சார்த்தியிருந்தது. அவனைப்பார்க்கவே எரிச்சலாயிருந்தது மைதிலிக்கு.“இவ்ளோ நாள் எங்க போனீங்க? எங்களைப்பத்தி கொஞ்சமும் கவலைப்படாம காணாம போய்ட்டு இப்போ வந்து வான்னு கூப்பிட்டால் உங்களை நம்பி எப்படி வருவது?”“போனதும் உங்களுக்காகத்தான். திரும்பி வந்ததும் உங்களுக்காகத்தான்.”“அதிருக்கட்டும். நகைகளை என்ன பண்ணினீர்கள்?”“................”“சொந்த வீட்டிலேயே பெண்டாட்டி நகையைத் திருடறீங்களே வெக்கமால்ல”“அதுக்கு பேர் திருட்டில்ல. உரிமை”“உரிமை என்பது கேட்டு வாங்கிக்கொள்வது.”“கேட்டிருந்தா குடுத்திருப்பியாக்கும்?”“சரி... அதைக்கொண்டு கடனெல்லாம் அடைத்தாகிவிட்டதா?”“ஓரளவுக்கு?”“ஓரளவுக்குன்னா? மிச்ச கடனை எப்டி அடைக்கப்போறீங்க?”“உனக்கு கணக்கு வழக்கெல்லாம் சொல்லிட்டிருக்க முடியாது. கிளம்புன்னா கிளம்பு. அல்லது என்கூட வர விருப்பமில்லாட்டி வரவேணாம். ஆனா, என்னை வெளிய போகச்சொன்ன இந்த வீட்டுல நீ இருக்கக்கூடாது. உங்கப்பன் வீட்டுக்குப்போ.”அவள் அவனையே பார்த்தாள்.அடுத்த அரைமணியில் குழந்தைகளை அழைத்துக்கொண்டு எல்லோரிடமும் விடைபெற்று, அவனோடு புறப்பட்டாள். **** *** *** ஃப்ரிஜ்ஜில் காய் எதுவுமில்லை. மளிகை பொருட்கள் குறைவாகவே இருந்தன.“பணம் வேணும்” மைதிலி அவனிடம் வந்து கேட்டாள்.“எதுக்கு?”வீட்டில் ஒரு பொருளும் இல்லை. எப்டி சமைக்க?அவன் தன் சட்டைப் பையிலிருந்து ஐயாயிரம் ரூபாய் எடுத்துக் கொடுத்தான். “இன்னும் ஆறு மாசத்துக்கு பணம் எதுவும் கேக்காதே சொல்லிட்டேன்”.ஐயாயிரம் ரூபாயில் ஆறுமாதம் குடும்பம் நடத்தச் சொன்னவனை திகைப்போடு பார்த்தாள். அவன் போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான்.“இங்க பாருங்க மாணிக்கம். அடுத்த படம் மினிமம் பட்ஜெட். பிரமாதமான ஸ்கிரிப்ட். குறைந்த செலவில் நிறைந்த லாபம் அள்ளிடுவேன். என்னை நம்புங்க...”மைதிலி முகம் சுளித்தபடி வெளியில் வந்தாள். மளிகைக் கடைக்கும், காய்கறி கடைக்கும் சென்று தேவையான பொருட்களின் பட்டியலைக் கொடுத்து வீட்டுக்குக் கொண்டு வந்து கொடுக்கச் சொல்லிவிட்டு வந்தாள்.பொருட்கள் வந்து சேர்ந்ததும் சமையலை ஆரம்பித்தாள். பல மாதங்கள் கழித்து சமைக்கும் நறுமணம் வீட்டில் பரவியது. நீண்ட நாட்கள் கழித்து வீட்டுச் சாப்பாடு சாப்பிடும் ஆர்வத்தில் வேக வேகமாக அள்ளி சாப்பிட்டான் ஆனந்தன். குழந்தைகளுக்கும் சோறு கொடுத்து தூங்க வைத்துவிட்டு அடுக்களையில் மிச்சம் மீதி பணிகளை முடிக்கச் சென்றவளின் கையைப் பிடித்து இழுத்தான். அவளைக் கிறக்கத்தோடு பார்த்தான். உடற்பசி அவன் கண்களில் தெரிந்தது. மைதிலி அவன் கையை உதறிவிட்டு அடுக்களைக்குச் சென்றாள். அவன் பின்னாலேயே வந்தான். “உன்னிடம் கொஞ்சம் பேசணும் வா” என்று அவளைப் படுக்கையறைக்கு இழுத்து வந்தான்.“உனக்கு என் மேல கோபமிருக்கும் மைதிலி. எனக்கு புரியுது. ஆனா வேற வழியில்லாமல் என்னால உனக்கும் குழந்தைகளுக்கும் கஷ்டம் வரக்கூடாதுன்னுதான் நான் சொல்லாம கொள்ளாம போயிட்டேன்”எங்க போனீங்க? என்ன பண்ணினீங்க?“அப்பா கொடுத்த பண்ணை நிலம் ஒன்றை விற்று பாதி கடனை அடைச்சுட்டேன்.மீதி கடன்?அதுக்குதான் உன் உதவி வேணும். நீ மனது வைத்தால் மீதி கடனை அடைத்துவிடலாம். எங்கம்மாவோட நகைகளைக் கொடு.“முடியாது. வம்சா வழியா இருக்கும் நகைகளை உங்களை நம்பி கொடுக்க முடியாது. ஏற்கெனவே இந்த வீட்டின் பேரில் வாங்கின கடன் இருக்கு. இப்போ நகைகளைக் கேக்கறீங்க. விற்றால் மறுபடியும் வாங்க முடியாத நகைகள் அவை”“என்னோட அடுத்த படம் நிச்சயம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆகும். செலவு கம்மி. வரவு அதிகம்னு மினிமம் பட்ஜெட் படம். அதை வெச்சு எல்லா கடனையும் அடைச்சுடுவேன்.“மாட்டீங்க. அடுத்த படத்தில் அதை முதலீடு செய்வீர்கள். உங்களைப் பத்தி எனக்குத் தெரியாதா? இந்த வீடு, நகைகள், இன்னும் இருக்கற சொத்துக்கள் எல்லாவற்றையும் விற்று கடனையெல்லாம் அடைங்க. வேணாங்கல. ஆனா, இனி சினிமா எடுக்க மாட்டேன்னு குழந்தைங்க மேல சத்தியம் பண்ணுங்க, நகைகளைத் தரேன். கஞ்சியோ கூழோ கடனின்றி நிம்மதியா இருப்போம்.”அவன் அவளையே பார்த்தான். “நா யோசிக்கணும்” என்றான்.“யோசிங்க. யோசிச்சு நல்ல முடிவெடுங்க.” அவள் எழுந்து சென்றாள்.இருதினம் கழித்து அவளிடம் வந்தான். குழந்தைகளின் தலையில் கை வைத்து சத்தியம் செய்தான். “இனி சினிமா எடுக்கல” என்றான். அவள் முகம் மலர்ந்தாள்.சந்தோஷமாக சிற்றுண்டி செய்து அன்போடு அவனுக்குக் கொடுத்தாள். குழந்தைகளை அவன் பொறுப்பில் விட்டுவிட்டு நகைகளை எடுத்துவர வங்கிக்கு கிளம்பினாள்.உயர்தர நவரத்தினக் கற்கள் பதித்த அவனது அம்மாவின் மிக அபூர்வமான விலை உயர்ந்த அத்தனை நகைகளும் லாக்கரில் மின்னியது. அவள் ஒருவிநாடி யோசித்தாள். பிறகு ஒரு முடிவுக்கு வந்தாள்.இரண்டு மணி நேரத்திற்குப்பிறகு வீட்டுக்கு வந்தவள் அவனிடம் ஒரு கவரை நீட்டினாள்.“என்ன இது? நகைகள் எங்கே?”“அவற்றை அடமானம் வைத்து வாங்கிய பணம்தான் இது. மிக அபூர்வமான நகைகள் அவை. உயர்தர நவரத்தினங்கள் பதிக்கப்பட்டவை. அவற்றை விற்றால் உங்கப்பா மனது வேதனைப்படும். அதனாலதான் அடமானம் வைத்தேன். இதைவைத்து அநியாய வட்டி வாங்கறவங்க கடனை அடைங்க. ரெண்டுபேரும் ஏதாவது வேலைக்குப் போவோம். சிக்கனமா வாழ்வோம். நகைகளை எப்டியாவது மீட்டுக்கலாம்.”அவன் முகம் சிவந்தது. “இந்தப் பணம் வட்டிக்குகூடக் காணாது” என்றான் எரிச்சலோடு. “உங்கப்பா கொடுத்த எல்லா சொத்துக்களையும் விற்று கடனை அடைங்க. நகைகள் மட்டும் மிஞ்சட்டும்”. “எங்கிட்ட சத்தியம் வாங்கிட்டு நீ ஏதேதோ செய்யற. இது சரியில்ல மைதிலி. இந்தப்பணம் எனக்குப் பத்தாது. சொத்துக்களில் பாதியை ஏற்கெனவே விற்றாயிற்று. இந்த வீடு மட்டும்தான் மிஞ்சியிருக்கு. அதுவும் அடமானத்தில்”.“நீங்க சொல்வதைப் பார்த்தால் மொத்த நகைகளை விற்றாலும் கடன் அடையாது போலிருக்கே. உண்மையைச் சொல்லுங்க. என்னதான் செய்யறீங்க? உங்க கடன் விவரங்களை எதையும் மறைக்காம சொல்லுங்க.”அவன் பளாரென அவள் கன்னத்தில் அறைந்தான். “பொம்பளையா லட்சணமா இரு. கேள்வி மேல கேள்வி கேக்கற? எங்கம்மா நகையை எடுத்து வெச்சுக்கிட்டு எனக்கே ஆட்டம் காட்டறயா? இரு வந்து உன்னை கவனிச்சுக்கறேன்” உறுமியபடி பணத்தோடு வெளியில் கிளம்பினான். அவள் நகை ரசீதை பத்திரப்படுத்திவிட்டு சோர்ந்து அமர்ந்தாள். பொய் சத்தியம் செய்திருக்கிறான். இவன் திருந்தமாட்டான்.நள்ளிரவுதான் அவன் திரும்பி வந்தான். அவன் வந்த அரைமணியில் அழைப்புமணி ஒலிக்க, அவள் எழுந்து சென்று கதவைத் திறந்தாள். யாரோ இரண்டு முரடர்கள் அவள் வாயைப் பொத்தி கைகளைப் பின்னால் காட்டினார்கள். அவள் திமிறினாள். அவனை அழைக்க முயற்சித்தாள். முடியவில்லை. அழைப்புமணி ஒலித்ததே யாராக இருக்குமென்று வெளியில் வந்து பார்ப்பானென்று நினைத்தாள். அவன் வரவில்லை. அவளை குண்டுகட்டாகத் தூக்கிச்சென்று ஒரு காரில் அடைத்தார்கள். பயத்தில் நினைவிழந்தாள் அவள்.ஏதோவொரு பழைய வீடு போலிருந்தது. பழைய கட்டிலொன்றில் அவள் கிடத்தப்பட்டிருந்தாள். நினைவு வந்தபோது தன் உடலில் புடைவை இல்லையென்பதைக் கண்டு அலறியடித்தபடி எழுந்தமர்ந்து கைகளால் உடலை மூடிக்கொண்டு அழுதாள். கட்டிலில் ஒரு போர்வை கூட இல்லை உடலை மூடிக்கொள்ள. யாரையும் காணவில்லை. பெருங்குரலெடுத்து கத்தி உதவி கோரினாள். பயத்தில் உடல் நடுங்கியது. தொண்டை வறண்டு, மூச்சுத் திணறுவது போலிருந்தது. எவ்வளவு நேரமாயிற்றோ? யாரும் வருவது போலவும் தெரியவில்லை. கத்திக்கத்தி குரல் தேய்ந்தது. கத்தக்கூடத் தெம்பின்றி ஆனது. யாரிவர்கள்? எதற்கு என்னை அழைத்துவந்து இப்படி புடைவையை உருவி அடைத்து வைத்திருக்கிறார்கள்? எதுவும் புரியாமல் தவித்தாள். தண்ணீருக்குத் தவித்தது வாய்.நீண்ட நேரம் கழித்து சார்த்திய கதவின் தாள் நீக்கப்படும் சப்தம் கேட்க அவள் வாரிச்சுருட்டியபடி கட்டிலுக்குப் பின்புறம் நகர்ந்து உடலைக் குறுக்கி யாரும் தன்னைக் காணாதவாறு மறைந்து கொண்டாள். யாரோ லைட்டைப் போட அவள் அலறினாள். என்னை விட்ருங்க... யாரு நீங்க? எதுக்கு என்னை இப்டி? நா என்ன தப்பு செய்தேன்?“நீ எதுவும் தப்பு செய்யல. தப்பு செய்யறவன் உன் புருஷன். வாங்கின கடனை அவன் ஒழுங்கா கொடுத்துட்டா உன்னை விட்ரப்போறோம். அவனிடம் பேசியிருக்கோம். அவன் பணத்தோட வந்து கடனை அடைச்சுட்டு உன்னைக் கூட்டிட்டு போகட்டும். அதுவரை கம்முனு இரு.“என் புடவையைக் கொடுங்க ப்ளீஸ்”.“புடவை இருந்தா தப்பிச்சு போயிருவ. அல்லது தற்கொலை பண்ணிக்க முயற்சிப்ப. அதான். நாங்க பொம்பளைப் பொறுக்கிங்க இல்ல. கடனைத் திருப்பி வாங்க இது ஒரு வழி. சாப்பாடு வெச்சிருக்கேன். சாப்பிட்டுவிட்டு சத்தம் போடாம இரு”. அவன் பொட்டலம் எதையோ வைத்துவிட்டு வெளியேறி கதவை மீண்டும் தாளிட்டான்.அவள் எழுந்து வந்து சாவி துவாரம் வழியே வெளியே பார்த்தாள். வெளியில் ஹால் மாதிரியிருந்த இடத்தில் ஒரு கொடியில் அவளது புடவை தொங்கிக் கொண்டிருந்தது. அதைத்தாண்டி ஒரு சிறிய முற்றம். ஆட்கள் யாரும் இருப்பதுபோல் தெரியவில்லை.ஏதோவொரு இடத்தில் உடலில் புடவையின்றி பாவாடை ஜாக்கெட்டில் கூனிக்குறுகி அமர்ந்து அழுது கொண்டிருந்தாள் அவள்.யாரை நொந்து கொள்வதென்று அவளுக்குப் புரியவில்லை. பேசிப்பேசி தன்னை இந்தத் திருமணத்திற்கு சம்மதிக்கச் செய்தவர்களையா, தொடர்ந்து தவறுகள் செய்யும் புருஷணையா அல்லது தன் விதியையா? அழுது அழுது கண்கள் வற்றியது. உடல் சோர்ந்து போயிற்று. கண்கள் அந்த உணவுப் பொட்டலத்தைப் பார்த்தன. சாப்பிடப் பிடிக்கவில்லையென்றாலும், இங்கிருந்து தப்பிச்செல்ல உடலில் கொஞ்சம் தெம்பு வேண்டும்அவள் பொட்டலத்தைப் பிரித்தாள். உள்ளே தயிர் சாதமும் ஊறுகாயுமிருந்தது. பிடிக்காவிட்டாலும் சாப்பிட்டாள். ஒரு மண் கூஜாவில் தண்ணீர் இருந்தது. கை கழுவிக்கொண்டு சாவித்துவாரம் வழியே பார்த்தாள். பார்த்துக் கொண்டேயிருந்தாள். கடவுளே யாரேனும் வரவேண்டும். மனசு பதைபதைப்புடன் வேண்டியது. இரண்டு மணிநேரம் கண்வலிக்கப் பார்த்துக் கொண்டிருந்த பின் முற்றத்தின் அருகே ஒரு வயதான ஆயா குடத்திலிருந்த தண்ணீரை ஒரு இரும்பு பக்கெட்டில் ஊற்றிக் கொண்டிருந்தாள். மைதிலி சாவி துவாரத்தில் வாயை வைத்து சத்தமாக அவளை அழைத்தாள்.(தொடரும்)