நீங்க அவசரமா முடிவெடுப்பது போல தெரியுது. தயசு செய்து யோசியுங்க. மைதிலி மீண்டும் சொல்ல,“இது அவசரமில்லம்மா. அவசியம். இனிமேல்தான் நீ ஜாக்கிரதையாக இருக்கணும். வெற்றி பெறணும் என்கிற வெறி இருக்குமளவுக்கு அவனிடம் நிதானமில்லை. இந்தக் கல்யாணத்தின் மூலம் நான் உனக்கு நல்லது செய்திருக்கிறேனா, கஷ்டங்களுக்கு வழி வகுத்துக் கொடுத்துவிட்டேனா தெரியவில்லை. அதனால சொத்துக்களைப் பிரித்தபிறகு எல்லா நாளிதழ்களிலும் ஒரு விளம்பரம் தரப்போறேன். ஆனந்தன் வாங்கும் எந்தவொரு கடனுக்கும் எவ்விதத்திலும் நான் பொறுப்பேற்க இயலாதென்று. இதுகூட உன் நன்மைக்காகத்தான். இதனால் அவனுக்கு யாரும் கடன் தர யோசிப்பார்கள். அவன் கடன் வாங்குவது குறைந்தால் அது உனக்கு நல்லதுதானே.”மைதிலிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அந்த வினாடி அவர் கடவுளாகவே தெரிந்தார் அவள் கண்களுக்கு.கையில் பணம் கிடைப்பதற்கு முன்பே செலவுக் கணக்கைத தயாரித்து வைத்துக் கொள்ளும் விசித்திர மனிதர்களில் ஒருவனாக இருந்தான் ஆனந்தன். சொத்துக்களைப் பிரிக்க அப்பா தயாராகிவிட்டார் என்பது அவனுக்கு மகிழ்ச்சியான செய்தி. நல்லகாலம் அவனது அடுத்த படத்திற்கு அதிக சிரமப்பட வேண்டாம் என்று தோன்றியது. முதல் படம் அனாவசிய செலவுகளைக் குறைத்து எடுக்கப்பட்ட சிறிய பட்ஜெட் படம்தான். அவனது நல்லநேரம், அது எல்லோராலும் பாராட்டப்பட்டு வசூல்ரீதியாகவும் அவனுக்கு வாரிக்கொடுத்தது.ஐந்தாயிரம் ரூபாய் கடனை நேர்மையாகத் திருப்பிக்கொடுத்தால் அடுத்து பதினைந்தாயிரத்தைக் கடனாகத் தருவதற்கு யாரும் யோசிக்க மாட்டார்கள். இதெல்லாம் ஒரு எளிய சூட்சுமம். அந்த சூட்சுமத்தைப் பின்பற்றி அவன் முக்கியமானவர்களிடம் வாங்கிய கடனை அடைத்துவிட்டான். அப்பா கொடுத்த பணத்தை கடன் என அவரும் சொல்லவில்லை. அவனும் நினைக்கவில்லை. அவர் கேட்டால் பார்த்துக் கொள்வோம் என்று விட்டுவிட்டான். அவர் கேட்கவில்லை. மாமனாரிடம் வாங்கிய பணத்தையும் உடனடியாகத் திருப்பிக் கொடுக்க அவனுக்கு மனம் வரவில்லை. அப்பா தனக்கு கோடீஸ்வர சம்பந்தத்தை முடித்திருந்தால் கிட்டத்தட்ட அரை கோடிக்கு குறையாமல் பணமாகவும் சொத்துக்களாகவும் கிடைத்திருக்கக்கூடும். அதைத்தவிர அவனது திரைப்பட முயற்சிகளுக்கும் பண உதவி செய்ய அஞ்சியிருக்க மாட்டார்கள்.கேவலம் ஒரு இருபத்தி ஐந்து லட்சத்தை மைதிலியின் தகப்பனிடமிருந்து வாங்குவதற்குள் பட்டபாடு! மனிதர் தன்னிடம் இருப்பது அந்த வீடு மட்டும்தானே என்று தயங்கினார். மூன்று பெண்களுக்கு கௌரவமாகத் திருமணம் செய்து வைத்ததால் தன்னிடம் பெரிய சேமிப்புகள் எதுவும் இல்லையென்றார். இதுவரை எந்தக் குறையுமின்றி தன் சக்திக்கு மீறியே மைதிலிக்கும் குழந்தைக்கும் செய்திருப்பதாகச் சொன்னார். தற்போது மனைவியின் உடலில் இருக்கும் தாலிக்கொடியும், கைகளில் உள்ள ஒரு ஜோடி வளையலும், தோடு மூக்குத்தியும் தவிர வேறு தங்க நகைகள்கூட வீட்டில் கிடையாது என்றார். எப்படியோ பேசிப்பேசி, பல சத்தியங்கள் செய்து வீட்டை அடமானம் வைக்கச்செய்து இருபத்தி ஐந்து லட்சத்தை அவரிடமிருந்து வாங்கி விட்டான். அடமான பத்திரத்தில் அவர்தான் கையொப்பமிட்டார். மாப்பிள்ளை என்பதால் அவனிடமிருந்து கடன் பத்திரம் எழுதி வாங்க அஞ்சினார். “உங்களை நம்பி தரேன் மாப்பிள்ளை. மாதா மாதம் வட்டி கட்ட மறந்துடவேண்டாம். அப்பறம் வட்டிக்கு வட்டின்னு கடன் ஏறிடும். பணம் கத்தலைநணா வீடு ஏலத்துக்கு வந்துரும். நாங்க அப்பறம் நடுத்தெருவுக்கு வந்துருவோம். அதனால சீக்கிரமே அசலையும் அடைச்சுட்டு பாத்திரத்தை மீட்டுக் கொடுத்துடுங்க.”“கவலையே படாதீங்க. இனி என் பொறுப்பு அது” என்று அவருக்கு நம்பிக்கை கொடுத்துவிட்டு வந்தாயிற்று. மாமனார் பணம்தானே எப்போது கேட்டாலும் கொடுத்துவிடலாம் என்று ஆரம்பத்தில் நினைத்தது போய், ஏன் கொடுக்க வேண்டும் என்று பின்னர் தோன்ற ஆரம்பித்துவிட்டது. அந்த வீட்டின் மதிப்பில் மூன்றில் ஒருபங்குதான் வங்கி கடனாகக் கொடுத்திருக்கிறது. ஒருவேளை அவர் காலத்திற்குப்பின் வீடு விற்கப்படுமெனில் மைதிலியின் பங்காக என்ன கிடைக்குமோ அதை முன்கூட்டியே வாங்கிக்கொண்டதாக இருக்கட்டுமே என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. சினிமா என்பது பெருங்கடல். அதில் எவ்வளவு பணம் கொட்டினாலும் கடலில் கரைத்த பெருங்காயம்தான். அந்த சமுத்திரத்தில் விலையுயர்ந்த சங்குகளையும், மீன்களையும், முத்துக்களையும் சேகரிக்க பலரும் வலைவீசிக் கொண்டிருக்கிறார்கள். சமுத்திரம் விசித்திரமானது, சிலநேரம் உழைப்பையும் பணத்தையும் விழுங்கி, வெறும் கையோடு அனுப்பி வைக்கிறது. சிலநேரம் வலம்புரி சங்குகளை அள்ளிகொடுத்து திக்குமுக்காடச் செய்துவிடுகிறது. அவனது முதல் படம் வெற்றி பெற்றது அப்படித்தான். போட்ட காசு கொஞ்சம். எடுத்த காசு அதிகம்.இனி அடுத்த படத்தில் கொஞ்சம் அகலக்கால் வைக்கலாம் என்று முடிவு செய்தான் அவன். ஸ்கரிப்ட் ரெடியாக இருக்கிறது. அதற்கு எவ்வளவு பணம் தேவைப்படுமென தன் உதவியாளர்களோடு அமர்ந்து ஒரு பட்ஜெட் போட்டான். கடலின் ஆழம் தெரியாமல் காலைவிடத் துணிந்தான்.செய்யும் தொழிலில் வெற்றி பெறுவதென்பதுகூட சிலநேரம் குதிரை ரேஸ் மாதிரிதான் ஆகிவிடுகிறது. எந்த குதிரையின் மீது எவ்வளவு பணம் கட்டினால் ஓடும் என்பது மாதிரிதான் நடிப்பு, இசை, கேமராமேனில் ஆரம்பித்து எடிட்டிங், மற்றும் பல டெக்னிக்கல் உதவியாளர்கள் வரை சிறப்பானவராக, மக்கள் மனம் கவர்ந்தவர்களாகத் தேர்வு செய்து அவர்கள் கேட்கும் தொகைக்கு ஒப்புதல் அளித்து, தினசரி சிற்றுண்டி, உணவு என அனைத்திற்கும் ஏற்பாடு செய்து, துணை ஆரட்டிஸ்ட்டுகள் ஏற்பாடு செய்து.. என்று ஒவ்வொரு செலவும் மூழ்கி பிதுங்கியது. எவ்வளவு பெரிய பூட்டாக இருந்தாலும் சரியான சாவி கொண்டு திறந்தால் பட்டென திறக்கும் பூட்டு மாதிரிதான் திறப்படத் தயாரிப்பும். பணம் என்ற மூன்றெழுத்து சாவி கொண்டுதான் எல்லாவற்றையும் மூடித்திறக்க வேண்டும்.முன்னணியில் இருக்கும் கதாநாயகன் நாயகி கேட்ட தொகையே மலைப்பாக இருந்தது. ஆனந்தன் நிறைய ஃபைனான்சியர்களை சந்தித்தான். அவர்களது கண்டிஷன்களுக்கெல்லாம் ஒப்புக்கொண்டான். போறாதாதற்கு, மைதிலியிடமும் பணம் கேட்டு நச்சரித்தான்.“எங்கிட்ட ஏது பணம்?”“நகைநட்டு இருக்கில்ல? அதையெல்லாம் கொடு. எங்கம்மா நகைகளும் உங்கிட்டதான் இருக்குன்னு எனக்குத் தெரியும். அவற்றையும் கொடு. அடமானம் வைத்துக் கொள்கிறேன்.”“முடியாது. என் நகைகள் வேணா தரேன். உங்கம்மா நகைகளைத் தரமாட்டேன். அவை பரம்பரை நகைகள். அவங்க ஞாபகார்த்தமா இருக்க வேண்டியவை.”“அப்டின்னா உங்கப்பா போட்ட நகைகளைக் கொடு. எனக்கு அவசரமாகக் கொஞ்சம் பணம் வேண்டும்.”“என் அப்பாவிடம் வாங்கிய பணத்தை முதலில் திருப்பிக் கொடுங்கள். பிறகு அவர் உழைப்பில் வாங்கிய நகைகளைக் கேட்கலாம்.”அவள் சொல்லி முடிப்பதற்குள் அவனது கரம் அவளது கன்னத்தில் பளாரென இறங்கியது. கண்ணில் பொறி பறப்பது போலிருந்தது. சொத்துக்கள் பிரிக்கப்பட்டன. ஆனந்தனின் பங்காக தி.நகரில் ஒரு அழகிய பங்களாவும், புறநகரில் ஒரு பண்ணை வீடும், தஞ்சாவூரில் ஐந்து ஏக்கர் விவசாய நிலமும், கிடைத்தது.“பணமா எதுவுமில்லையா?”“பணம் ஏற்கனவே உன் முதல் படத்திற்காக நீ கேட்டதும் உனக்கு கொடுத்தாயிற்று. நகைகள், வெள்ளி பொருட்கள் எல்லாம் உன் திருமணம் முடிந்ததுமே மைதிலியிடம் ஒப்படைத்தாயிற்று. அவற்றை அவள் பத்திரமாக லாக்கரில் வைத்திருக்கிறாள்”.ஆனந்தனின் முகம் சுருங்கியது.“எனக்கு இப்போ அவசரமா பணம்தான் தேவை.“அதுக்கு நான் என்ன செய்ய? உன் பங்கு சொத்துகளைக் கேட்டாய். பிரித்தாயிற்று. இனி உன் வரவு, செலவு, கடன்கள் எல்லாம் உன்னுடையது. அவற்றில் எங்களுக்கு எந்த பாத்தியதையுமில்லை புரிந்ததா? தி.நகர் வீடு உன் கொள்ளுதாத்தா முதன்முதலில் வாங்கிய வீடு. தற்போது அதிலிருந்த குடும்பத்தை காலி செய்யவைத்து வீட்டை சுத்தப்படுத்தி வைத்திருக்கிறோம். நீ குடிபுகுவதற்குத் தயாராக உள்ளது.”“அண்ணன்கள் இருவரும்?”“அவர்களுக்கு கோடம்பாக்கம், அபிராமபுரம் வீடுகளைக் கொடுத்திருக்கிறேன். ஆனால் அவர்கள் என்னோடு இங்கிருக்கவே விரும்புகிறார்கள்.”“அப்படியானால் என்னை வெளியே போ என்கிறீர்களா?”“நான் சொல்லவில்லை. நீதான் தனியே செல்ல விரும்பினாய். தொடர்ந்து நீ இங்கிருக்க விரும்பினால் தாராளமாக இருக்கலாம். ஆனால் குடும்பத்தின் செலவுகளுக்கு மாதா மாதம் மற்றவர்கள் தருவதைப்போல நீயும் பணம் தரவேண்டும். முன்போல இனி நீ சுகவாசியாக இங்கிருக்க முடியாது.”ஆனந்தன் முகம் சுருங்கினான். எல்லோரும் சேர்ந்து அவனை மலை மீதிருந்து தள்ளிவிடுவது போலிருந்தது. அவனுக்கு நன்கு புரிந்தது. அவன் சினிமா எடுப்பது யாருக்கும் பிடிக்கவில்லை. அவனது சினிமா மோகத்தினால்தான் சொத்துக்களைப் பிரிக்க வேண்டியதாயிற்று என்கிற கோபம். அண்ணன்கள் அதிருஷ்டசாலிகள். அவன் காரணமாக, எவ்வித பிரயத்தனமுமின்றி அவர்களுக்கு சொத்துக்களும் கிடைக்கிறது. அதேநேரம் தொடர்ந்து இங்கேயே இருக்கவும் போகிறார்கள். மனசு புழுங்கியது அவனுக்கு.“கொள்ளுத்தாத்தா முதன் முதலில் கட்டிய பழைய வீட்டை எனக்குக் கொடுத்துட்டாங்க. அவங்க ரெண்டு பேருக்கும் ஓரளவுக்கு புது வீடு” மைதிலியிடம் புலம்பினான்.“மனசுல சந்தோஷமும் திருப்தியும் இல்லாதவர்களுக்கு, இந்த உலகத்து செல்வம் முழுக்கவே தூக்கிக் கொடுத்தாலும் புலம்பத்தான் செய்வார்கள்.”மைதிலி முணுமுணுத்தவாறு திரும்பி படுத்தாள்.சொத்துக்களைப் பிரித்துக் கொடுத்த பிறகு தனியே செல்வதுதான் சரியெனத் தோன்றியது அவளுக்கு. அந்த வீட்டினரை அவள் அதிகம் மதிக்கிறாள். நேசிக்கிறாள். அவர்களும் அவளிடம் அன்பு கொண்டவர்கள்தான். ஆனால் புருஷனின் குணத்தால் அவையெல்லாம் வெறுப்பாக மாறிவிடுமோ என்ற அச்சம் அவளுக்கிருந்தது. தங்களது கஷ்டமும் நஷ்டமும் எக்காரணம் கொண்டும் மற்றவர்களை பாதிக்க அனுமதிக்கக்கூடாது என்று தோன்றியது.ஆனால் ஆனந்தன் தன் இரண்டாவது படம் முடியும்வரை அங்கிருப்பதற்கு அனுமதி கேட்டான். தனியே போவதற்கு அவகாசம் வேண்டுமென்றான். அவர் மறுக்கவில்லை. ஆனால் அவன் அதுவரை குடும்பச் செலவுக்கு மாதம் பதினைந்தாயிரம் பணம் தரவேண்டுமென்ற நிபந்தனை விதித்தார். அவன் சம்மதித்தான்.தனியே போவது தற்காலிகமாகத் தள்ளிப்போடப்பட்டது. அவனது இரண்டாவது படம் வளர்ந்தது. படவேலைகளில் முழுகிப்போனவன் வீட்டிற்கு வருவதே அபூர்வமாகிப்போனது. வாக்கு கொடுத்தபடி அப்பாவிடம் மாதாந்திர செலவுகளுக்குப் பணம் கொடுக்க வேண்டுமென்கிற சிந்தனையே இல்லை அவனிடம். ஆனால் மைதிலிக்குத் தூக்கம் வரவில்லை. அவளது தன்மானம் அவளைத் தூங்கவிடவில்லை. தனது நகைகள் சிலவற்றை எடுத்துக்கொண்டு அடமானம் வைத்து கடன் பெற வங்கிக்கு சென்றாள். நகைக்கடன் பகுதியில் நான்கைந்து பேர் நின்றிருக்க, ஒரு பக்கமாக அமர்ந்தாள்.“நகை அடமானம் வைக்க வந்தாயா? அருகில் குரல் கேட்டதுமைதிலி திடுக்கிட்டுத் திரும்பினாள். (தொடரும்)