வளமான உற்பத்தித் திறனுடன் நலமான எதிர்காலம் காண்போம்!

பிப்ரவரி 12 தேசிய உற்பத்தி திறன் தினம்!
உற்பத்தி திறன் தினம்...
உற்பத்தி திறன் தினம்...www.edudwar.com

"உற்பத்தி என்பது ஒரு விபத்து அல்ல. இது எப்போதும் சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்பு, அறிவார்ந்த திட்டமிடல் மற்றும் கவனம் செலுத்தும் முயற்சியின் விளைவாகும். ”-பால் ஜே. மேயர்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு புள்ளிவிவர நிபுணரான பால் ஜே. மேயரின் கருத்துதான் இது. தேசிய உற்பத்தித்திறன் தினமான இன்று இவரின் கருத்தைப் பகிர்ந்து உற்பத்தி திறன் குறித்த விழிப்புணர்வை பகிர்வோம்.

ஒரு நாடு சிறந்து விளங்க வேண்டும் எனில் அந்நாட்டு மக்களின் உழைப்பும் அவர்கள் மூலம் உருவாகும் வணிகப் பொருட்களின் உற்பத்தியும் மிக மிக அவசியம். வெறும் உழைப்பு மட்டும் இருந்து திட்டமிடலும் உற்பத்தியில் கவனமும் இல்லையெனில் தொழில் முன்னேற்றம் காணாது. இதைக் கருத்தில் கொண்டு பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் உற்பத்தி திறன், புதுமை மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவே இந்தியாவில் ஆண்டுதோறும் தேசிய உற்பத்தி திறன் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் உற்பத்தி கலாச்சாரத்தை மேம்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு இந்திய அரசாங்கம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், 1958 இல் தேசிய உற்பத்தித் திறன் கவுன்சிலை (NPC) நிறுவியது. இந்தக் கவுன்சில் உற்பத்தி பெருக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. 

வணிகப் பொருட்களின் உற்பத்தி...
வணிகப் பொருட்களின் உற்பத்தி...

உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு துறைகளுக்கு ஆலோசனை சேவைகளை வழங்குதல். ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு-தலைமையிலான உற்பத்தித்திறனை அதிகரிப்பது, ஐடி- இயக்கப்பட்ட சேவைகள் மற்றும் மின்-ஆளுகையை ஊக்குவிப்பது, ஆட்சேர்ப்பில் உதவி எனத் தொடர்கிறது இதன் செயல்பாடுகள்.

உற்பத்தித்திறன் மற்றும் அதற்கான கருவிகள்/தொழில்நுட்பங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடையே உற்பத்தித்திறன் மற்றும் புதுமைக்கான விழிப்புணர்வை வளர்ப்பதே தேசிய உற்பத்தித்திறன்  தினத்தின் முக்கிய நோக்கம். இந்தக் கொண்டாட்டம் இந்த ஒரு நாளில் மட்டும் அல்ல. பிப்ரவரி 12 லிருந்து 18ம் தேதி வரை, தேசிய உற்பத்தித்திறன் வாரமாக வருடம்தோறும் ஒரு தீம் மற்றும் அதை சார்ந்த செயல்பாடுகளுடன் கொண்டாடப்படுகிறது.

2024 தேசிய உற்பத்தித்திறன் வாரத்தின் கருப்பொருள் "செயற்கை நுண்ணறிவு (AI) - பொருளாதார வளர்ச்சிக்கான உற்பத்தித்திறன் இயந்திரம்". இந்தத் தீம் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் பொருளாதார முன்னேற்றத்துக்கு உந்துதலுக்கும் அறிவியல் கண்டுபிடிப்பான AI இன் திறனை எடுத்துக்காட்டுகிறது.

இந்த தீம் அடிப்படையில் சிறப்புப் பேச்சுக்கள், பட்டறைகள், உற்பத்தித்திறன் முனைகளில் உள்ள பிரச்சனைகளை மையமாகக் கொண்ட வட்ட மேசை உரைகள். கருப்பொருள் தொடர்பான போட்டிகள். உற்பத்தித்திறனுடன் தொடர்புடைய பயிற்சி திட்டங்கள் மற்றும் உற்பத்தித்திறன் கருத்தின் மீதான இயக்கப் பிரச்சாரங்கள் ஆகியவை நடைபெறும்.

இதையும் படியுங்கள்:
உடல் எடையை குறைக்க உதவும் ஐந்து எளிய பானங்கள்!
உற்பத்தி திறன் தினம்...

மேலும், தகுதி வாய்ந்த இளைஞர்களின திறமைகளை வளர்த்தல், சுற்றுச்சூழலின் தரத்தை மேம்படுத்துதல், விவசாயத்தை மறுசீரமைத்தல்,உள்நாட்டு பயன் பாட்டிற்காக அறிவியல் மற்றும் AI தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதுடன் தொழில் மயமாக்கலின் கட்டமைப்பையும் வடிவத்தையும் மேம்படுத்தி சிறந்த வாய்ப்புகளுடன் உற்பத்திப் பகுதிகளைத் தேர்ந் தெடுப்பது போன்ற பல திட்டங்கள்  வறுமை காரணமாக வேலையில்லாதவர்களையும் முன்வைத்து அவர்களின் பொருளாதாரத் தேவைக்கும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற உற்பத்தித்திறனை மேம்படுத்தும் முன் முயற்சிகள் வறுமை மற்றும் வேலையின்மை போன்ற சமூக பிரச்சனைகளை தீர்த்து  நாடு முழுவதும் சமத்துவமான சமூகத்தை உருவாக்கி சர்வதேச சந்தையில் மற்ற நாடுகளுடன் திறம்பட போட்டியிடுவதற்கு முக்கியமானதாக அமைகிறது.

தொழில் சிறக்க தரமான உற்பத்தித் திறனைப் பெருக்கி பொருளாதாரத்தில் சிறக்க இன்றைய தலைமுறையினரிடம் உற்பத்தித்திறன் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com