ராஜாஜி முதல் ஸ்டாலின் வரை: தமிழகத்தை நீண்ட காலம் ஆண்ட முதல்வர் யார் தெரியுமா?

சுதந்திரத்திற்கு பிந்தைய தமிழக அரசியலில், நீண்ட காலம் முதல்வராக கோலோச்சிய தலைவர்கள் மற்றும் அவர்களின் பதவிக்காலம் குறித்த ஒரு முழுமையான பார்வை.
Longest serving CM Tamil Nadu
Longest serving CM Tamil NaduAI Image
Updated on
Kalki strip
Kalki strip

இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு மெட்ராஸ் மாகாணத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தது. சுதந்திரத்திற்கு பிறகு தமிழகத்தை ஆண்ட முதல் முதல்வர் ஓ.பி.ராமசாமி ரெட்டியார் 1947-1949 வரை. அதன் பின்னர் பி.எஸ். குமாரசாமி ராஜா 1949- 1952 வரை தமிழக முதல்வராக இருந்தார்.

1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ் கட்சியின் ராஜாஜி முதலமைச்சராக பொறுப்பேற்றார். குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்ததால் பெரும் எதிர்ப்புகளைச் சந்தித்த ராஜாஜி, தனது பதவியை ராஜினாமா செய்தார் (அவரது பதவிக்காலம் 1952 முதல் 1954 வரை).

அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியின் காமராஜர் முதலமைச்சரானார். காமராஜர் தொடர்ந்து 3 முறை முதலமைச்சராக இருந்து 9 ஆண்டுகள் 1954 முதல் 1963 வரை தமிழகத்தை ஆட்சி செய்தார். 1963ஆம் ஆண்டு K-Plan திட்டத்தின் கீழ் அவர் பதவி விலகினார். அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியின் எம்.பக்தவச்சலம் 1963 முதல் 1967 வரை தமிழக முதல்வராக இருந்தார். இந்தி எதிர்ப்பு போராட்ட எழுச்சி காரணமாக காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோற்றது.

1967ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று அண்ணாதுரை முதலமைச்சரானார். திராவிட இயக்கத்தில் வந்த முதல் முதல்வர் அவர் தான். அவரது ஆட்சிக்காலத்தில் மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 1969ஆம் ஆண்டு அவர் மறைந்தார்.

அதனைத் தொடர்ந்து கருணாநிதி முதலமைச்சரானார். 1971ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சி அமைத்தாலும், நெருக்கடி நிலை காலத்தில் அவரது அரசு கலைக்கப்பட்டது. 1989ஆம் ஆண்டு மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்தார். (1969-1976, 1989-1991, 1996-2001, 2006-2011 என மு.கருணாநிதி 5 முறை தமிழக முதல்வராக இருந்தார்.

எம்.ஜி.ஆர் தி.மு.கவில் இருந்து பிரிந்து அ.தி.மு.க தொடங்கி, 1977ஆம் ஆண்டு முதலமைச்சரானார். தொடர்ந்து 1980 மற்றும் 1984 தேர்தல்களிலும் வெற்றி பெற்று தொடர்ந்து 3 முறை சுமார் 10 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

வி.என்.ஜானகி (வைக்கம் நாராயணி ஜானகி, 1923–1996) தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர், முன்னாள் திரைப்பட நடிகை மற்றும் எம்.ஜி.ஆரின் மனைவி ஆவார். கணவர் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் 1987 டிசம்பர் 4-ம் தேதி முதல் 1988 ஜனவரி 28-வரை, 23 நாட்கள் அ.தி.மு.க சார்பில் தமிழக முதல்வராகப் பொறுப்பு வகித்தார்.

இதையும் படியுங்கள்:
இந்திரா காந்தி முதல் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரை: அரசியலை மாற்றியமைத்த மர்மமான ஜோதிட கணிப்புகள்!
Longest serving CM Tamil Nadu

அ.தி.மு.க கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார் ஜெ.ஜெயலலிதா அதன் பின்னர் அவர் 6 முறை தமிழக முதலமைச்சராக பதவி வகித்தார். 1991ஆம் ஆண்டு முதல் முறையாக பதவியேற்ற அவர் 2011 மற்றும் 2016 தேர்தல்களிலும் வெற்றி பெற்றார். சொத்து குவிப்பு வழக்கு காரணமாக அவர் சிறை தண்டனை பெற்றார்.

அந்த காலகட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால முதலமைச்சராக ( 2001-2002, 2014-15, 2016-17) மூன்று முறை பதவி வகித்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, 2017ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க கட்சியின் சார்பில் முதலமைச்சரானார். அவர் சுமார் 2017-2022 வரை 4 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

கருணாநிதியின் மறைவுக்கு பிறகு தி.மு.க தலைவரான மு.க.ஸ்டாலின் 2021ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின் 2026 வரை தமிழக முதல்வராக பதவியில் இருந்தார்.

அந்த வகையில், தமிழ்நாட்டில் நீண்ட காலம் முதலமைச்சராக இருந்தவர் வரிசையில் தி.மு.க தலைவரான கருணாநிதி முதலிடத்தில் உள்ளார். அவர் மொத்தம் ஐந்து முறை முதலமைச்சராகப் பொறுப்பு வகித்து, சுமார் 18 ஆண்டுகளுக்கும் மேலாக (6,863 நாட்களுக்கு மேல்) பதவியில் இருந்தார்.

logo
Kalki Online
kalkionline.com