
படங்கள்: பிரபுராம்
ஏம்பா! இப்படி ஊருக்கு ஒதுக்குப்புறமா வீட்டை கட்டிட்டு பைக் மட்டும் வாங்கினா எப்படி? ஒரு படகையும் சேர்த்து வாங்கி போடுங்கனு சொன்னேனே கேட்டீங்களா இப்ப பாருங்க!
*********************************
டாக்டர் மனைவி: என்னங்க இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க?
டாக்டர் : அடிக்கிற மழையை பார்த்தா நம்ம கிளினிக்குக்கு இன்னும் ஒரு வாரத்துக்கு நிறைய பேஷன்ட்ஸ் வருவாங்க போல இருக்கு அதான்!
*********************************
இந்த பாகவதர் பேச்சைக் கேட்டு கச்சேரிக்கு வந்தது தப்பா போச்சே
அப்படி என்ன சொன்னார்?
நான் அமிர்தவர்ஷினி பாடினா மழை வரும். புன்னாக வராளி பாடினா பாம்பு வரும். நீலாம்பரி பாடினா தூக்கம் வரும்னார். ஆனா இங்க கல்லுல பறந்து வருது!
*********************************
நேத்து ஒரே "அடை" மழை!
தொட்டுக் கொள்ள வெண்ணெயா? வெல்லமா?
-கே.எஸ். கிருஷ்ணவேனி, மைலாப்பூர்.
*********************************
"ஏன் சார்... ! குடையை விரிக்காம மழையில நனைஞ்சுட்டு ஆபீசுக்கு வர்றீங்க... ? "
"குளிச்சுட்டு தூங்கினா நல்லா தூக்கம் வருமாம்.! "
-என்.உஷாதேவி, மதுரை.
*********************************
"நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மழையால் பட்டாசுத் தொழில் பாதிக்கப் படாத வகையில், தீபாவளி பண்டிகை மே மாதத்திற்கு மாற்றம் செய்யப்படும் என்பதை..."
*********************************
"ஒரு மாநிலத்தில் கன மழை, மற்றொரு மாநிலத்தில் வறட்சி என்று இருப்பதைத் தவிர்க்க, விரைவில் ஒரே நாடு, ஒரே மழை திட்டம் கொண்டு வரப்படும் என்பதை இந்த மேடையிலே பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.."
-ஆர். பிரசன்னா, திருச்சி.