
மோகனும் பானுவும் இளம் தம்பதிகள் மணந்து ஆறு மாதம் தான் ஆகியிருக்கும்.
கப்பலில் ஆறுமாதம் வேலை. எல்லா நாடுகளுக்கும் பயணிப்பவன். ஆறுமாதம் லீவு கிடைத்தவுடன் ஊர் வந்திருந்தான்.
கல்யாணமான புதிதில் சில நாள் கரைந்து போக, மீதி நாட்களில் இரவின் தனிமையில் மோகன் மார்பில் மீது சாய்ந்து கொண்டு அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பது பானுவுக்கு பிடித்த ஒன்று. பதிலுக்கு பானுவின் சருமத்தை பூ மாதிரி வருடி கொடுப்பான்.
பானு பானு அந்தரங்க பொழுதில் கூப்பிடும் மோகன் “எனக்கு என்ன ஆசை தெரியுமா பானு?“
“சொல்லுங்க“
“நமக்கு ஒரு பெண் குழந்தை உன்னை மாதிரியே கோதுமை நேரத்தில் மிருதுவாக“ என்பான்.
அதை மறுத்து பானு “எனக்கு உங்கள மாதிரி ஒரே பையன் புத்திசாலியாக வேண்டும்” என்பாள்.
அவர்கள் ஊடலில், இந்த அன்பு சண்டை எப்போது முடியும் என்கிற அளவில் இருக்கும்; அதற்குள் பொழுது விடிந்து விடும்.