Memes / JOKES

Memes / JOKES

-வசந்தா மாரிமுத்து, சிட்லபாக்கம்

-ஆர். பிரசன்னா, ஸ்ரீரங்கம்.

ஜோக்ஸ்!     

 “நீ எத்தனை மாசமா லவ் பண்றே?”

“பத்து மாசமா!”

“அவளைப் பத்தி என்ன தெரிஞ்சுகிட்டே?”

“பணத்தை முழுவதும் காலி பண்ணிடுவா!”

*************************

“என்னோட லவ்வர் எதையும் புதுமையா செய்வார்டி!”

“என்ன செய்தார்?”

“தலையில பூவுக்கு பதிலாக பூச்செண்டையே வைச்சுட்டார்டி!”

ஆர்.மகாதேவன், திருநெல்வேலி .

 *************************

 "இந்தப் பொண்ணு உன் வருங்கால மனைவியா?"

 "வருங்கால காதலி!"

  *************************

"லவ் ப‌ண்றவனுக்கு என்ன  ஸ்வீட் கொடுக்கலாம்?"

  "எதைக் கொடுத்தாலும் கொடு.  அல்வா மட்டும் கொடுத்துடாதே."

  *************************

"எங்களுடையது 444 நாள் காதல்."

  "பிக்சட் டிபாசிட் காதல்னு சொல்லு."

  *************************

"எஸ்.எம்.எஸ்.ல லவ் பண்ணின ஜோடி இப்ப என்ன செய்யுது?" 

   "வாட்ஸப்ல  மேரேஜ் இன்விடேஷனை அனுப்பிட்டு இருக்கு..."

 *************************

"கெட்டிமேளம் கெட்டிமேளம்னு ஏன் இவன் குதிக்கிறான்?"

  "லவ் லெட்டருக்குப் பதில் வந்துட்டதாம்."

  *************************

“நான் உன்னை லவ் பண்றதா வீட்ல சொன்னேன்."

  "என்ன ஆச்சு?"

   " அந்த அசடை உடனே வரச் சொல்லு பார்க்கணும்னு சொல்லி அவசரப்படறாங்க."

 - பர்வதவர்த்தினி, சென்னை  

   *************************

"ஒரு டாக்டரை லவ் பண்ணது தப்பாப் போச்சுடி."

"ஏன்? என்னாச்சு?"

"என் மனசு பூரா நீதான் இருக்கன்னு  சொன்னதற்கு, ஒரு ஸ்கேன் பண்ணி பார்த்துடலாம்னு சொல்றாரு!"  

- என்.சாந்தினி, மதுரை  

 ************************* 

“என்னடா, லவ்வ ப்ரொபோஸ் பண்ணின உடனே, பைக்க ஓரமா நிறுத்திட்டு, இந்தக் கரடு முரடான ரோட்ல நடத்திக் கூட்டிட்டுப் போற. எங்க போறோம்?”

 “ஒண்ணுமில்ல, காதலர் பாதை கரடு முரடா, கல்லும் முள்ளுமாதான் இருக்கும்னு காட்டத்தான்.”

  *************************

“காதலர் தினத்தன்று நம்ம காதல ஏத்துக்கிறேன்னு சொன்னியே.. இப்ப என்ன இவ்வளவு யோசிக்கிற?”

“இல்ல, இப்பத்தான் என்னோட ஆபீஸ் மேனேஜர்கிட்ட கமிட் ஆயிட்டேன். அத எப்பிடி சொல்றதுன்னு யோசிக்கிறேன்.”

- ஜெயகாந்தி மகாதேவன், சென்னை

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com