கவிதை - கருணை மழையே…

Rainy Season
Rainy Season

ழையெனும் தேவனே

ஏன் இந்தக் கோபம் உனக்கு?

மேகத் திரைக்குள்

ஒளிந்து கொண்டாயே...

மேகங்களை உடைத்து

உனை அழைத்த

காற்றையும் தள்ளி விட்டாயே.

‘நேரங்கெட்ட நேரத்தில் 

பெய்யுதே’ என்று புலம்பி

கறுப்புக் குடை பிடித்து

உனக்கு எதிராகப் போராட்டம்

நடத்தும் மனிதர்கள்

கண்டு வெறுத்தாயோ?

மூடப்படாத குழிகள்

நிகழ்த்திப் பார்க்கும்

மரணங்களைக்

கண்டு தவித்தாயோ...?

நடை பாதை வாசிக்கு 

எதிரியானோமே என்று

கலங்கினாயோ...?

மரங்களை வெட்டி

காடுகளை அழித்தோம்

விளை நிலங்களை

வீட்டு மனைகளாக்கினோம்

உன் ஆதாரங்களை அழித்தோம்

மணலைத் திருடி நீர் நிலைகளுக்கு

உன்னைச் சேர்த்து வைக்கும்

வலிமையை அழித்தோம்.

குடிநீருக்கும் விலை கொடுக்கும்

இத்தருணம் உணர்கிறோம்.

வருண பகவானே நீ

இதையும் படியுங்கள்:
எண்ணெய் உணவுகள் சாப்பிட்ட பிறகு பயமா?
Rainy Season

எம் பிழை பொறுத்து நீர் வார்க்க வா...

வறண்ட பூமி ஏங்குகிறது.

சுகமான சுமையாக

உன்னைத் தாங்க காத்திருக்கிறது.

கருணை செய்வாய் மழையே!

               -விஜயலக்ஷ்மி, மதுரை.

நன்றி: மங்கையர் மலர்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com