
வாசலில் ஆள் அரவம் கேட்டவுடன், யாரு?
“அய்யா நான் தான் பூக்கடை பூங்காவனம்.”
“எம்மா, நீ அந்த கோவில் வாசலில் பூக்கடை வைத்துருக்கிறவதானே.”
“ஆமாம், அய்யா”
“என்ன விஷயம் என் வீட்டைத்தேடி வந்திருக்க?”
“அய்யா, உங்களுக்கு உடம்பு முடியலையென்ற காரணத்தினாலே சத்சங்க நவராத்திரி விழாவுக்கு மலர் மற்றும் மாலைகள் மொத்த வியாபாரத்தை வேண்டாம் சொல்லிட்டீங்களாம். சுபாம்மா அந்த வியாபாரத்தை என்னை எடுத்து பண்ண சொல்றாங்க. எனக்கு இந்த மாதிரி வியாபாரத்தில் அதிக அனுபவம் இல்லை. அதான் நீ போய் சாராங்கனைப்பார் அவர் உனக்கு தொழிலை கத்துத்தருவார்ன்னு சொன்னாங்க. அதான் உங்கள பாக்க வந்தேன் அய்யா.”
“அம்மா... முதல்ல இது சாமி சமாச்சாரம். இரண்டாவது இதை இரண்டு நாள் வைச்சு வியாபாரம் பண்ணமுடியாது. பூவின் தரம் போய்விடும். இதுல அதிகம் லாபம் பார்க்க முடியாது. ஆனால், கையை கடிக்காம பார்த்துக்கணும். ரொம்ப எதிர்பாக்கக்கூடாது ஏன்னா, திருப்பி சொல்றேன், இது சாமி சமாச்சாரம் புரிஞ்சுதா?"