
ஒவியம் ; பிள்ளை
“நம்ம சேகர் சார் ஏன் ’sad’ ஆ இருக்கார்?...!
“அவர் மனைவி நவராத்திரி ஒன்பது நாளும் கட்டிக்க ஒன்பது புடவை கேட்கறாங்களாம்...!”.
-ஆர். பிரசன்னா திருச்சி
***********************************
நம்ம அலட்டல் அலமேலு வீட்டு கொலுவில் ட்ரோன் பறக்குதே எதுக்கு?
அவ வீட்டுக் கொலு பொம்மையை யாரும் தொடாம பாத்துக்கணும்னு தான் இந்த ஏற்பாடு.
***********************************
நம்ம ரமா வீட்டு வாசல்ல என்ன ஒரே கூட்டம்?
அவ வீட்டுக் கொலுவுல பாடணும்னா செலக்ஷன் ரவுண்ட் இருக்காம். அதான் பெரீய க்யூ…
***********************************
உன் ஃப்ரெண்ட் லீலா இண்டர்நேஷனல் லெவல்ல கொலு ஏற்பாடு பண்ணியிருக்காளாமே..
ஆமாமாம்.. ரோபோ தான் வெத்தல பாக்கே கொடுக்குமாம்.
- ப்ரஸன்னா , நவி மும்பை
***********************************
வரப்போற நவராதிாிக்கு என்ன வாங்கலாம்னு இருக்க ?
எல்லா வீடுகள்ளேயும் சுண்டல் வாங்கலாம்னு இருக்கேன்…
***********************************
உங்க வீட்டு நவராத்திாி சுண்டல் நவரசமா இருக்கே எப்படி.?
அதுவா பலபோ் வீட்ல வாங்கின சுண்டலாச்சே அதனாலதான்!!
-நா. புவனாநாகராஜன் செம்பனாா்கோவில்.