நீங்க இப்ப சாப்பிடறது கூட நேத்து பண்ண பொங்கல்தான்!

kalki Jokes
kalki Jokes
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

-ஓவியம்: ரஜினி

“எங்க ஓட்டல்ல சாப்பிடற ஐட்டத்தை எல்லாம்  வீணடிக்க மாட்டோம் சார்.”

“நிஜமாவா?”

“ஆமாம். நீங்க இப்ப சாப்பிடறதுகூட நேத்து பண்ண  பொங்கல்தான்.”

--------------------------------------------------

“தலைவரே, சி.பி.ஐ. நாலு கேள்வி கேட்டு உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி  இருக்கு?”

“சாய்ஸ் கொடுத்திருக்காங்களாய்யா?”

--------------------------------------------------

“அந்தப் புது படத்துல நாலு இன்ட்ரோல் வருது?”

“என்னது நாலு இன்ட்ரோலா?”

“ஆமாம். படத்துல மூணு பாட்டு வருது .”

--------------------------------------------------

kalki Jokes
kalki Jokes

“கூட்டணிக்காக  எங்க கட்சிக் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.”

“தலைவரே,  நீங்க இப்ப இருப்பது ஜெயில்ல!”

--------------------------------------------------

“தலைவர் அரசியலை விட்டு ஒதுங்கப்போறார் போலிருக்கு!"

“எப்படிச் சொல்றீங்க?"

“மக்களுக்காக நான் மிகப்பெரிய தியாகத்தைச் செய்யப் போகிறேன்னு சொல்லியிருக்காரே...!"   

--------------------------------------------------

“நம் மன்னர் அடிக்கடி ஏன் மந்திரியாரிடம் மாதம் மும்மாரி பொழிகிறதான்னு கேட்கிறார்?”

“பின்ன... எப்ப பார்த்தாலும் அந்தப்புரத்துலயே  இருந்தா  எப்படித் தெரியும்?”

-தீபிகா, சென்னை

logo
Kalki Online
kalkionline.com