நியூயார்க் நகரில் ஹாப்பி தீபாவளி

நியூயார்க் நகரில் 
ஹாப்பி தீபாவளி
Published on

லகம் முழுவதிலும் பரவலாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை இம்முறை ஒரு புதிய வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.

நியூயார்க் நகரின் அடையாளங்களில் ஒன்றான, உலக வர்த்தக மையத்தில் வரலாற்றில் முதன்முறையாக தீபாவளி அடிப்படையிலான அனிமேஷன் மற்றும் அலங்காரங்களுடன் கொண்டாப்போகிறார்கள்

“உலக வர்த்தக மையத்தைவிட வலிமை மற்றும் வெற்றியைப் பறைசாற்றும் சின்னம் இல்லை. அது மட்டுமின்றி, தீபாவளி வாழ்த்தை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் இந்த முயற்சியில், நவம்பர் 26 மாலை 6 மணிக்கு தொடங்கும் அனிமேஷன் நவம்பர் 24 நள்ளிரவு வரை லைவாக சானல்களில் காட்டப்படும்.

உலகம் முழுவதிலும் பல நாடுகளில் குடியேறிய மற்றும் வசித்துவரும் இந்துக்களால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கணிசமான அளவு இந்துக்கள் வசிக்கும் மக்கள் தொகை கொண்ட நாடுகளில் அந்தந்த நாட்டு அரசாங்கமே தீபாவளியைக் கொண்டாடும் வழக்கமும் அதிகரித்து வருகிறது.

அதேபோல லட்சக்கணக்கான குடும்பங்கள் வசிக்கும் அமெரிக்காவிலும் தீபாவளி பண்டிகை இந்தியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீபாவளிக்கு பொது விடுமுறை அளிக்கும் மசோதாவை நிறைவேற்றுவதற்கான கோரிக்கைகள் சில பதிவு செய்யப்பட்டது.

இதற்கு முன்னதாகவே அமெரிக்க முன்னாள் அதிபர்கள் பராக் ஒபாமா முதல் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் பெண்மணியான கரோலின் வரை பலரும் இந்தியர்களின் பண்டிகைக்கு, குறிப்பாக தீபாவளிக்கு முக்கியத்துவம் அளித்து, அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து, அதிபர் மாளிகையில் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் தீபாவளி கொண்டாட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் அனிமேஷன் காட்சிகள் கிட்டத்தட்ட இரண்டரை நாட்களுக்கு மேலாக லைவ் ஆக ஒளிபரப்பபடப்போகிறது.

கட்டிடத்தில் தீபம் எரிவதைப் போல மத்தாப்பூக்கள் வெடித்து மலர்வதைப்போல பிரம்மாண்ட லேசர் அனிமேஷன்கள் காட்சிப்படுத்தபடும்.

அதுமட்டுமின்றி ஹட்சன் நதிக்கரையின் இரண்டு பக்கங்களிலும் பட்டாசுகள் வெடித்து தீபாவளி கோலாகலமாக கொண்டாட அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

இந்திய-அமெரிக்க உறவை பலப்படுத்தவும், இந்தியர்கள் தங்கள் பாரம்பரிய பண்டிகைகளைக் கொண்டாடுவதற்கான முயற்சியாகவும் இது அமைந்துள்ளது. “அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை மேம்படுத்தும் விதமாக, இந்த WTC மேடையில் வண்ணமயமான காட்சிகள் தீபாவளி கொண்டாட்டத்தை வெளிப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்" என்கிறார் இந்த கொண்டாட்டங்களை நிகழ்த்தும் சவுத் ஏஷியன் என்கேஜ்மென்ட் ஃபவுண்டேஷனின் (SAEF) டிரஸ்டீயான மார்க் டோமினோ.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com