நாணயவியல் அருங்காட்சியகம் - நாசிக்!

நாணயவியல் அருங்காட்சியகம் - நாசிக்!
Published on

சியாவின் மிகப் பெரிய நாணய மியூஸியம் மும்பை நாசிக் அருகேயுள்ள அஞ்சநேரியில் அமைக்கப் பட்டுள்ளது.

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ரிசர்ச் இன் நியுமிஸ்மேடிக் ஸ்டடீஸ் (Indian Institute of Research in Numismatic Studies) நிறுவனம், 1980ஆம் ஆண்டு நாணயவியல் (Numismatist) வல்லுனர் திரு பரமேஷ்வர்லால் குப்தா மற்றும் தொழிலதிபர் திரு.கே.கே. மகேஸ்வரி ஆகிய இருவரின் முயற்சியுடன் ஸ்தாபிக்கப்பட்டது.

மகாராஷ்டிரா அரசால் அங்கீகரிக்கப்பட்ட ரெஜிஸ்டர்ட் டிரஸ்ட் ஆன இந்நிறுவனம் 1984இல் நாசிக் அருகேயுள்ள அஞ்சநேரிக்கு நகர்த்தப்பட்டது.

தேசத்தின் சரித்திரத்திலுள்ள கலாசாரம், நாணவியல் பாரம்பரியம் மற்றும் அது சம்பந்தப்பட்ட பல்வேறு விஷயங்களை மக்களுக்கு அறிய வைக்கும் பொருட்டு ஆரம்பிக்கப்பட்ட INHCRF (Indian Numismatic Historical and Cultural Research Foundation), 1987ஆம் ஆண்டு பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது.

அஞ்சநேரி வாழ்மக்கள் இதனை ‘நானே சங்க்ரகாலய’ (Nane Sangrahalaya) மற்றும் ‘காயின் மியூஸியம்’ என்று கூறுகின்றனர்.

505 ஏக்கர் பரப்பரளவில் இருக்கும் இந்த மியூஸியத்தில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இந்திய சரித்திரத்தின் நாணய விபரங்கள் பல பேனல்களினுள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கல் தோன்றி மண் தோன்றாத கால கலாச்சாரம், இன்டஸ்வேலி (Indus Valley), Harappa Civilization Copper and Iron Using Culture, 5/6ஆம் நூற்றாண்டு, BCE நாணயங்கள்; அநேக வகை (இந்தியாவின்) கரன்ஸி ஸிஸ்டம், நாணயம் அச்சடித்தல், தயாரித்தல், Moulds, Dyes; Replicas என்று சொல்லிக்கொண்டே போகலாம்….

மியூஸியத்தின் முதல் பகுதியிலுள்ள காட்சி பேனல்களில் நிறுவனம் சேகரித்த இந்திய நாணயங்களின் சரித்திரம், நாணயங்கள், விபரங்கள் ஆகியவைகளும்,

இரண்டாம் பகுதியிலுள்ள காட்சி பேனல்களில் கே.ஜி. மகேஸ்வரியின் போட்டோகிராபிக் workம் வைக்கப்பட்டுள்ளன.

மியூஸியம் வளாகத்தில் பெரிய நூலகம் ஒன்றும் உள்ளது. இங்கே வந்து அமர்ந்து புத்தகங்கள் எடுத்து படிக்கலாம். எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.

இங்கே நாணயவியல் சம்பந்தமாக ஆராய்ச்சி செய்ய வருபவர்களுக்கு, பயிற்சி பெற்ற ஆராய்ச்சியாளர்கள் பாடங்களில் உதவுகின்றனர்… கட்டணமின்றி!

ஆராய்ச்சி சம்பந்தமாக வருபவர்களுக்கு Selrlar’s Residence உள்ளது. இந்தியன் மற்றும் வெளிநாட்டவர்கள் தங்க விருந்தினர் இல்லம் இருக்கிறது.

இந்தியாவில் நாணய சேகரிப்பை ஊக்குவிக்கும் வகையில் அடிக்கடி பயிலரங்கங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

மியூஸியத்தினுள் இருக்கும் சிறுகடையில், கிராமிய கைவினைப் பொருட்கள் விலைக்குக் கிடைக்கின்றன.

மியூஸியத்தைச் சுற்றிப் பார்க்க 1½ மணி நேரம் தேவைப்படுகிறது.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9.30 முதல் 1 மணி வரை மற்றும் மாலை 2 முதல் 5.30 மணி வரை திறந்திருக்கும். ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்கள் கிடையாது.

நுழைவுக் கட்டணம் மற்றும் போட்டோ எடுக்க கட்டணம் உண்டு.

பார்த்துத் தெரிந்துகொள்ள அநேக விஷயங்கள் இம்மியூஸியத்தில் இருக்கின்றன.

திரு பரேமஷ்வர் லால் குப்தா (காயின் மியூஸியத்தின் முதல் டைரக்டர்).

பி.எல்.குப்தா என அழைக்கப்படும் இந்தியராகிய இவர் நாணயவியல் வல்லுனர் ஆவார். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு பிந்தைய காலத்திலேயே இவரது தொகுக்கப்பட்ட படைப்பு ‘Coins’ (காயின்ஸ்) வெளியிடப்பட்டது.

பனாரஸ் யுனிவர்ஸிட்டியில் புராதன இந்திய சரித்திரம் மற்றும் கலாசாரம் குறித்து படித்து முதுகலைப் பட்டம் பெற்றவர்.

அஞ்சநேரி ‘காயின்’ மியூஸியத்தின் முதல் டைரக்டராக பணியாற்றியவர். காயின்ஸ் குறித்தும் நாணயவியல் பற்றியும் அநேக புத்தகங்களை எழுதியுள்ளார்.

நாணயவியல் அருங்காட்சியகத்தின் (Late K.G.மகேஸ்வரியின்) ஆர்ட் காலரி

திரு கே.ஜி. மகேஸ்வரி ஒரு புகழ் பெற்ற சித்திரக் கலைஞர். தனது வாழ்வில் 70 வருடங்களை போட்டோ கிராபிக்காக செலவழித்தவர். சிறுவனாக இருந்த காலத்தில் ரூபாய் மூன்றிற்கு மும்பைக் கடையிலிருந்து  கேமரா வாங்கி போட்டோ  எடுக்க ஆரம்பித்தவர். பின்னர் Cotton ginning and Pressing பிஸினஸ் தொடங்கி பிஸியான போதிலும் போட்டோகிராபியை விடவில்லை. திறமை மிக்கவர்.

அருமையான புகைப்படங்களையெடுத்து அநேக விருதுகள் பெற்றுள்ளார். பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்கையில், புராதன கலைப் பொருட்கள்; வாங்கி சேகரிப்பது இவரது வழக்கம்.

இம் மியூஸியத்தில் இவர் எடுத்த அரிய புகைப்படங்கள் மற்றும் கலைப் பொருட்கள் இரண்டாவது பகுதியில் வைக்கப்பட்டுள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com