எந்த வயதுக்காரர்கள் என்றாலும் தங்கள் கடந்த கால வாழ்க்கையை அசை போடும்போது, பார்த்த திரைப்படங்களையும், யாரோ ஒரு நடிகருக்கு தீவிர ரசிகராக இருந்ததையும், சென்று வந்த சினிமா தியேட்டர்களையும் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. ஏனெனில் அவை கடந்த வாழ்க்கையின் அங்கம் மட்டுமல்ல, நம் உணர்வோடு ஒன்றியவை.
அப்படிப்பட்ட நினைவுகளை மீட்டெடுக்கும் நூல்தான் இது.
ஓவியர் ஜீவா, சிறந்த புகைப்படக் கலைஞர், எழுத்தாளர் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். தமிழ்த் திரைப்படங்கள் என்றில்லாமல் மலையாளம், ஹாலிவுட் திரைப்பட ஞானமும் இவரிடம் தளும்பி நிற்கும்.
இந்நூல் பல பத்திரிகைகளில் இவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான். எனவே “வரிசையாகப் படிக்க வேண்டும்“ என்ற நிர்ப்பந்தம் இல்லை.
"ஒரு பீடி யுண்டா சகாவே "- நான் குடியிருக்கும் கோவைப்புதூரில் இருந்து 25 கி.மீ., தொலைவில் உள்ள பாலக்காட்டுப் பக்கம் சென்று வந்த உணர்வு. கேரள அரசியலும், குறிப்பாக கம்யூனிசமும் திரைப்படங்களும் எவ்வாறு தொடர்புடையவை என்று அழகாகக் கூறுகிறார்.
"கனம் கோர்ட்டார் அவர்களே "- திரைப்படங்களில் நீதி மன்றக்காட்சிகள் பற்றி அக்குவேராக அலசியிருப்பார்.
பாரிஸ்டர் ரஜினிகாந்த் தோரணைக்கு மாற முயன்ற வக்கீல்கள் பலர் இருந்திருப்பார்கள்.
‘கௌரவம்’, ‘திக்கற்ற பார்வதி’, ஏன் சமீபத்திய ‘ஜெய் பீம்’ ஹிந்தி மராத்தி படங்களையும் விளக்குகிறார். நடிகை சுஜாதா வக்கீலாகப் பிளந்து கட்டிய ‘விதி’ படம் ஏனோ இவர் விட்டுவிட்டார்.
நெடுமுடி வேணு மலையாளப் படங்கள் அதிகம் பார்ப்பதில்லை எனினும் பார்த்தவரை, பண்பட்ட குணசித்திர நடிகர். விடை பெற்ற கலைஞன் பற்றிய கட்டுரை.
பாசமலர் போல் சகோதர பாச படங்கள் குறித்தும்,,
வெள்ளித்திரை கண்ட பாரதி என்று அன்று பாரதி வேஷம் போட்ட sv சுப்பையாவிலிருந்து, பாரதியார் தொடர்புடைய படங்களை அலசுகிறார். ஏழாவது மனிதனை விட்டு விட்டார் என்று நினைக்கிறேன்.
நான் கூறியது குறைவே.
படிக்க வேண்டிய நூல்.