பகுதி – 5அசோகமித்திரன் - ராஜேஸ்வரி -பெ.மாடசாமி.1931ல் தொடங்கி, 2017 வரை 86 ஆண்டு காலம் வாழ்ந்து வாசகர்களுக்காக விலை மதிப்பில்லா இலக்கியப் படைப்புகளை ஈன்று மறைந்தாலும், மறக்க இயலாத மாமனிதராக தமிழில் மட்டுமல்ல; பன்மொழி இலக்கிய உலகில் வாழ்ந்துகொண்டிருப்பவர்தான் தியாகராஜன். தியாகராஜனைப் பின்னுக்குத் தள்ளி அசோகமித்திரனே ஆட்சி செய்தார் இலக்கிய உலகில்.சிறுகதை, நாவல், நாடகம், நாடக நடிகர், கட்டுரையாளர், விமர்சகர், மொழி பெயர்ப்பாளர், பத்திரிகையாசிரியர், நகைச்சுவை ரசிகர், மற்றவர்கள் மனம்நோக விரும்பாத மனிதநேயர் என பன்முகத்தாளர்தான் அசோகமித்திரன்.பள்ளிப்பருவத்தில் தேர்வைத் தேடி ஓடிய மாணவன், தேர்வில் வினாவுக்கான விடையைப் புத்தகத்தில் உள்ளது போல் எழுதாமல், சுயமாக எழுதுகிற பழக்கமும் ஆற்றலுமே அவருடைய படைப்புகளுக்கான அரிச்சுவடி. பள்ளியில் துணைப் பாடமாக படித்த Tale of Two Cities என்ற நாவல்தான் அவரின் அரிச்சுவடிக்கு அடுத்த வாய்ப்பாடு.மாயவரம் பூர்வீகமாக இருந்தாலும் ரயில்வேயில் தந்தைக்குப் பணி என்பதால் செகந்திராபாத்தில் 20 ஆண்டுகாலம் வாசம். எதைப் பார்த்தாலும் அதனை இயல்பாக நோக்குகிற மனிதர். பட்டதாரியானவர், தந்தையின் மறைவுக்குப் பின் தந்தையின் நண்பர் எஸ்.எஸ்.வாசனின் அழைப்பை ஏற்று ஜெமினி ஸ்டுடியோவின் மக்கள் தொடர்பு அதிகாரியாகி உலகத்தைப் புரிந்துகொள்கிறார்.தன்னுடைய ஆங்கிலப் புலமை காரணமாக இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா பத்திரிகையில் “My Years With Boss” என்பதின் வாயிலாக எழுத்துலகில் அடியெடுத்து வைத்தார்.முழு நேர எழுத்தாளராக விரும்பியவர், வாசனிடம் சொல்லி விடைபெறுகிறார். மனைவி, மகன் ரவிக்குமார் என்ற நிலையில் வாழ்க்கை ஆரம்பமாக, வருமானம் இல்லாத எழுத்துத் துறையில் முடிவோடும் துணிவோடும் கால் பதிக்கிறார்..அதைப்பற்றி குறிப்பிடுகிறபோது, ‘ஜெமினியில் பார்த்த வேலையை விட்டிருந்த நேரம், கொஞ்சம் மனசு வேதனை யாகத்தான் இருந்தது. அந்த நேரத்தில் ஆங்கில எழுத்துக்கான ‘ரெமுனரேசன்’ (remuneration) கொஞ்சம் அதிகம் என்பதால் அது கைகொடுத்தது’ என்கிறார். 1958 வரை ஆங்கிலத்தில் எழுதியவர் இனி தாய்மொழியில் தான் எழுத வேண்டும் என்ற முடிவை தனக்குள் உருவாக்கிக்கொண்டார்.டில்லியில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் நிருபராக இருந்த கஸ்தூரிரங்கன் தமிழகத்தில் அரசியல் ஏடு ஆரம்பிக்க விரும்பி உருவாக்கிய ‘கணையாழி’க்கு பொறுப்பாசிரியரானார் அசோகமித்திரன். பொறுப்பாசிரியர் என்பது பெத்த பெயர்தான்; ஆனால், அவர் வாங்கிய சம்பளம் தினக்கூலியை விட குறைவாகும். ‘கணையாழி’க்காக வந்த கதை, கட்டுரை, கவிதைகளை ஒழுங்குப்படுத்தி, அச்சில் ஏற்றி புத்தகமாக்கி பின்(pin) அடித்து போய்ச் சேர வேண்டியவர் களின் விலாசம் எழுதி கட்டுக்கட்டி அனுப்புகிற வரை அவருடைய பணி ‘ஒன் மேன் ஷோ’வாகவே இருந்தது.இன்றைய பல எழுத்து ஆளுமைகளுக்கு கணையாழி வாயிலாகப் படிக்கட்டு அமைத்துக் கொடுத்தவர் அசோகமித்திரன். அரசியல் ஏடாக உருவாக்க நினைத்த கஸ்தூரிரங்கனின் எண்ணம் மட்டும் நிறைவேறாத வகையில், அதனை ஒரு இலக்கிய ஏடாக்கி விட்டார்.தன்னுடைய குறைந்த வருமானத்தில் எப்படி எளிமையாக, இனிமையாக, வாழ்வது என்பதைச் செயல்வடிவம் ஆக்கியவர். ஒருமுறை அசோகமித்திரனைப் பார்க்க வந்த வெளிநாட்டு நண்பர், அசோகமித்திரன் மனைவி ராஜேஸ்வரியைப் பார்த்து Your Husband என்று சொல்லி தன்னுடையக் கட்டைவிரலை உயர்த்திக் காட்டிவிட்டுச் சென்றார் என்று குறிப்பிடுகிறார் ராஜேஸ்வரி அசோகமித்திரன்.அந்தக் கட்டைவிரல் (Thumbs Up) உயர்வதற்கு அதனோடு சேர்ந்த மற்ற நான்கு விரல்களாக ராஜேஸ்வரி, மகன் களான ரவிசங்கர், முத்துக்குமார், ராமகிருஷ்ணன் ஆகியோர் இருந்தார்கள் என்பதை அந்த வெளி நாட்டுக்காரர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கணவருக்குக் குறைந்த வருமானம்; பிள்ளைகள் படிக்க வேண்டும். வீட்டில் இருந்துகொண்டே புடைவைகள் வாங்கி, தெரிந்தவர்களிடம் விற்பனை செய்து வருமானத்தைத் தேடிக்கொண்டார் என்பது அசோகமித்திரனின் படைப்புகளின் தடைபடாத நீட்சிக்கு ஆணிவேராக அமைந்தது. தன்னுடைய வாழ்க்கையி்ன் பின்பகுதியில், தான் கலந்துகொண்ட நிகழ்வுகளுக்கு ராஜேஸ்வரியோடு சென்றார் என்பது, ‘என் வளர்ச்சி உன்னால்தான்’ என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது.அவருடைய மறைவுக்குப் பின்பும் அவர் நினைவாக வழங்கப்படுகிற விருது நிகழ்வுகளிலும் அவர் கலந்துகொள்வது கணவரின் எழுத்தை அவரும் கொண்டாடுகிறார் என்பதைத்தான் காட்டுகிறது..1986ல் முதல் மகன் வேலையில் சேர்ந்த பின்பே அவர்களின் நிலையில் சற்று மாற்றம் ஏற்பட்டது. அவருடைய குடும்ப நிலையை மற்றவர்கள் புரிந்து கொண்டார்களே தவிர, அவர் தன்னுடைய நிலையை எந்த இடத்திலும், எந்தக் காலத்திலும் வாய்மொழியாகக்கூட பதிவு செய்யவில்லை என்பது ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு நல்ல பண்பாகும்.‘தாத்தாவிடம் தனக்குப் பிடித்தது அவருடைய நேர்மை, அடக்கம், மனிதநேயம்தான்’ என்று அவருடைய பேத்தி ஜனனி சொல்கின்றபோது, அவர் வாழ்ந்த வாழ்க்கை, எழுதிய எழுத்துக்கள் வீணாகவில்லை என்பதைக் காட்டுகிறது.அவருடைய மகன்கள் வேலைக்குச் சென்ற பின்பே குடும்பம் பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபட்டது. ஆனால், அதற்கு முன்பே 1973ல் அமெரிக்காவின் அயோவா பல்கலைக்கழகம் எழுத்தாளர்களின் சிறப்பு பயிலறங்கத்துக்கு அவரை அழைத்தபோதே அவருடைய சமூக அந்தஸ்து வெளிப்பட்டுவிட்டது.200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 10 குறுநாவல்கள், 8 நாவல்கள், 8 கட்டுரைத் தொகுப்புகள், மொழிபெயர்ப்பு நூல்கள் என அவர் தந்த தமிழ் இலக்கியப் படைப்புகளை இன்றைக்கும் வாசிப்பது, விவாதிப்பது, விமர்சிப்பது அவருக்கான தனிச்சிறப்பின் அடையாளமாகும்.சமுதாயத்தில் நடுத்தர, நகர்ப்புற மக்களின் இன்ப, துன்பத்தை எளிமையாக, தெளிவாக, வார்த்தைகளின் சிக்கனத்தோடு, விரைவான ஓட்டத்தில் அடுத்து என்ன என்ன என்று வாசகர்களின் ஆவலைத் தூண்டுகிற வகையில் யதார்த்தத்தை அவருடைய படைப்புகளில் பார்க்க முடிகிறது..இந்த நடைதான் மொழி பெயர்ப்பாளர்களுக்கு மிக எளிமையாக இருக்கிறது என்று குறிப்பிடுகிறார்கள். இல்லாமையை, இயலாமையையே, எடுத்துரைக்கிறார் என்று சிலரும், இல்லாமை இருப்பதால் எடுத்துரைக்கிறார் என்று சிலரும், ஐரோப்பா, லத்தீன், அமெரிக்க இலக்கியங்களில் கூட இவருடைய படைப்புகள் போன்ற பதிவுகள் இல்லை என்று சிலரும், இன்னும் சொல்லப் போனால் அவரால்கூட இனிமேல் இதுபோல் எழுத முடியுமா? என்று தெரியவில்லை என்று சிலரும் குறிப்பிடுகிறார்கள்.அவரின் நகைச்சுவைக்கு முத்தாய்ப்புதான் ‘முறைப்பெண்’ என்ற சிறுகதையாகும். வயது வித்தியாசம் பார்க்காது ‘மனுஷ்கந்தன்’ என்ற சிறுவனுக்காக, அவனுடைய குறும்படத்துக்காகத் தன்னுடைய ‘யுகதர்மம்’ என்ற சிறுகதையின் முடிவையே மாற்றி அமைத்தார். கடிதங்களுக்கு பதில் எழுதுவதில் ஒரு முன்னோடி. தன்னுடைய கட்டுரையில் சக எழுத்தாளர்களைப் பற்றி எழுதுவது எல்லோருக்கும் இல்லாத ஒரு சிறப்பு. பிரபலங்களுக்கு அஞ்சலி கட்டுரை எழுதியபோது எனக்கான அஞ்சலி கட்டுரையைக்கூட நானே எழுதி வைத்துவிட்டேன் என்று நகைச்சுவையோடு குறிப்பிடுகிறார்.தான் நடித்த நேரத்தில் தன்னுடைய மகனையும் தன்னோடு நடிக்க வைத்து அழகுபார்த்த அப்பா அவர்..நடேசன் பூங்கா ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக பலனளித்திருக்கலாம். அசோகமித்திரனின் பல படைப்பு களின் பிரசவ அறையே அதுதான். அங்கு தன்னை யாருக்கும் தெரியாது. விளக்கு இல்லாமல் எழுதிட முடியும் என்ற வகையில் காலை அரை மணி நேரத்தில் பல படைப்புகளை எழுதிட முடிந்ததாகக் கூறுகிறார்.முகநூலின் மூலம் வெளிநாட்டிலிருக்கும் தன் பிள்ளைகளோடு தொடர்புகொள்வதை மகிழ்ச்சியாக எடுத்துக்கொள்கிறார்.ஒரு சம்பவம் இப்படி நடப்பதற்குப் பதிலாக இப்படி நடந்தால் என்ன ஆகும் என்று பாசிட்டிவாக யோசிப்பேன் என்றும் சாத்தியங்கள் (Positity) இருக்கிற வரை கதை எழுதிக்கொண்டே இருக்கலாம் என்றும் கூறுகிறார்.ஒவ்வொருவரும் தங்களின் பொறுப்பில் பிறர் மனம் வருந்தாத மாதிரி நடந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணமே, எப்போதும் தனக்குள் இருக்கிறது என்று குறிப்பிடுவது அவருடைய மனித நேயமிக்க மனதைக் காட்டுகிறது.தன் வாழ்வைப் பிறருக்குப் பயன்படுகிற வகையில், அதேநேரத்தில் தன்னைச் சார்ந்தவர்களையும் அரவணைத்துச் சென்று, தமிழ் இலக்கியப் படைப்பை உலகளவு உயர்த்தி உயர்ந்தவரைக் கொண்டாடுவது என்பது வாசிப்பை இன்றைய இளைஞர்கள் மத்தியில் ஊக்குவிப்பதேயாகும்.