பகுதி – 6 -பெ. மாடசாமி.‘கிறுக்கனின் மனைவி’, ‘பித்தனின் மனைவி’, ‘பைத்தியக்காரனின் மனைவி’ – இவை செல்லம்மாள் கடந்து செல்கிறபோது காதில் விழுந்த சொற்கள். பாரதியாரின் மறைவுக்குப் பின் வானொலியில் பேசுகிறபோது, “இன்று என்னை மகாகவி பாரதியாரி்ன மனைவி” என்று அறிமுகம் செய்கிறீர்கள். ஆனால், அன்றைக்கு என்னை பல உதடுகள் “கிறுக்கனின் மனைவி போகிறாப்பாரு...” என்று செல்லம்மாள் சொன்னதாகக் குறிப்புகள் உண்டு.அன்பான கணவன், ஆணாதிக்கமின்றி தன் மனைவியை ஆசையாக அழைத்திடும் சொல்தான் ‘செல்லமே’ என்பதாகும். அந்தச் செல்லத்தைப் பெயராகக் கொண்ட பாரதியின் இல்லத்தரசி பெயருக்கேற்றாற்போல் வாழ்ந்தாரா? மகாகவி உருவாவதற்குப் பின்புலமாக இருந்தவரின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை தெரிந்துகொள்வது ஒவ்வொரு தமிழனின் கடமையல்லவா?பொதிகை அடிவாரத்தில் குற்றாலச்சாரலில் அகத்தியர் அருவிக்கு அடுத்து சிவசைலத்தின் பார்வையில் அமைந்த கடையத்தில் பிறந்த செல்லம்மாள் ஏழு வயதில் எட்டையபுரத்தைச் சேர்ந்த 14 வயதான சுப்பிரமணியை திருமண பந்தத்தில் கரம் பிடிக்கிறார்.“இந்த புள்ள பொறந்ததுமே ஆத்தாளையும் அப்பனையும் விழுங்கிடுச்சி”ன்னு கிராமங்களில் சொல்ற மாதிரி, சுப்பிரமணி, தன் ஐந்து வயதில் அம்மாவையும் 16 வயதில் அப்பாவையும் இழந்து தனிமரமான ஒரு சிறுவன். தன்னை நம்பி வந்த ஏழு வயது சிறுமிக்கு என்ன செய்ய முடியும்? என்ன செய்யத் தெரியும்? என்பதற்கான விடைதான் என்ன?கரம் பற்றியவளுக்கு இயல்பான சிறுவயது ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் இருப்பது இயற்கைதான்..பல மொழிகளைக் கரைத்துக் குடிக்கத் தெரிந்தவனுக்கு, புலமையால் மற்றவர்களைத் திகைக்க வைக்கத் தெரிந்தவனுக்கு, நிழலாய் இருப்பவள் கஞ்சியாவது குடித்தாளா? என்பதை உணர முடியாததுதான் சோகமான ஒன்று.ஆரம்பத்தில் செல்லம்மாவிடம் அவர் காட்டிய கோபத்தை ஆணாதிக்கம் கொண்ட சராசரி மனிதனாகத்தான் பார்க்க முடிகிறது. படிக்காத சிறுமிக்கு வாழ்வின் திக்குதிசை தெரியாததால் மேலோங்கிய சகிப்புத் தன்மையானது வாழ்நாள் முழுமையும் அவளிடம் உரிமையோடு வாழ பழகிக்கொண்டது.தன் வாழ்வில் நடைபெற்ற, தான் விரும்பாத சிறுவயது திருமணமானது சமுதாயத்தைச் சாடுவதற்கு பாரதிக்கு ஒரு ஆரம்பமாக அமைகிறது. ஆரம்பத்தில் செல்லம்மாவிடம் காட்டிய கோபம் சமுதாயத்தின் மூட நம்பிக்கைகள் மீதும், வெள்ளையன் மீதும் திரும்புகிறது.வறுமையோடு வாழக் கற்றுக்கொண்ட செல்லம்மாள் கரம் பிடித்தவரோடு தேசாந்திரியாய் வாழ்வது எப்படி என்பதையும் தெரிந்துகொள்கிறார்.‘தன் கணவர் பக்தி கவிஞரோ; கற்பனை கவிஞரோ அல்ல அவர் தேசிய கவிஞராக இருந்ததே தன் இன்னல் அதிகமானதற்குக் காரணம்’ என நாசூக்காகக் குறிப்பிடுகிறார்.“யாருக்கு வேண்டுமானாலும் மனைவியாக வாழலாம்; கவிஞனுக்கு மனைவியாய் இருப்பது கஷ்டம்” என்ற வரிகளை இந்த தேசத்துக்காக தன் மனதுக்குள்ளே நிரந்தர வைப்புநிதியாக வைத்ததால், பாரதி ‘தேசக்கவி’ என்றால் செல்லம்மாள் ‘தேசக்கவியைக் காத்த நம்முடைய நேசக்கவி’ என்று சொன்னால் மிகையாகாது.அவரும் எல்லா பெண்கள் போன்று தன் கோபத்தைக் கணவரிடம் காட்டியிருந்தால் பாரதியைப் பற்றி புகழ்ந்து பேசுவதற்கு என்ன இருந்திருக்குமோ இப்பாரினில்?பாரதியின் மனதில் எழுந்த கவிதையில் வந்த கண்ணம்மா வேறொரு பெண் என்பதை அந்தப் படிக்காத மேதை உணராமல் இல்லை.“எதை வேண்டுமானாலும் சகித்துக்கொள்ள முடியும். அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால் அதில் முக்கால் பாகத்தை காக்கை, குருவிகள் மட்டுமே புசிப்பதை தன்னால் சகித்துக்கொள்ள முடியவி்ல்லை” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்..‘தனியொருவனுக்கு உணவில்லை என்றால் சகத்தினை அழித்திடுவோம்’ என்று முழங்கியவரை “உலகத்தோடு வாழ வகை தெரியாத, அறியாத கணவனோடு வாழ்ந்தேன்” என்கிறார். கூற்றுக் கவிஞனுக்காக அவனுடைய தேசத் தொண்டுக்காக, கொள்கைக்காக தன்னை அர்ப்பணித்து வாழக் கற்றுக்கொண்ட ஒரு வாழ்க்கைக் கவி அல்லவா செல்லம்மாள்?!பிஜி தீவில் வாழும் இந்தியருக்குப் பசிக்கிறது என்பதை உணர முடிகிறது. அதற்காகப் போராடத் தெரிகிறது. அவருக்கு அருகிலேயே இருக்கும் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் பசிக்கும் என்பது தெரியாமல் போனதை, அவர் அருகில் இருக்கும்போது கேட்காமலேயே வாழ்ந்த சகிப்புத்தன்மையின் சாதனைப் பெண்ணாகவே வாழ்ந்துவிட்டார்.ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் ஏதோ ஒன்றினால் மாற்றம் ஏற்படுவதுண்டு. மனிதனாக இருந்த காந்தியை மகாத்மாவாக மாற்றியது அவர் பயணம் ஒன்றில் படிக்க நேர்ந்த “கடையனுக்கும் கடைத்தேற்றம்” என்ற புத்தகம். வழக்கறிஞராக இருந்த காந்தியை நாட்டுக்காகப் போராட வைத்தது தென் ஆப்பிரிக்காவின் ரயில் பயணம். கோட்டு சூட் அணிந்தவரை வேட்டியும் துண்டுமாக மாற்றியது மதுரைச் சம்பவம்.விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிதாவை சந்தித்தபோது அவர் கேட்ட ஒரு கேள்வியில்தான் பெண் விடுதலையும் பெண் சமத்துவமும் தன் வீட்டின் உள்புறமிருந்து தொடங்க வேண்டும் என்பது பாரதிக்குப் புரிந்தது..“அச்சமில்லை, அச்சமில்லை அச்சமென்பதில்லையே! உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதினும் அச்சமென்பதில்லையே” என்று நெஞ்சுறுதியோடு பாடியவன் தன் தவறை உணர்ந்தபோது அவன் மனசு இளகுகிறது. செல்லம்மாவிடம் மன்னிப்பு கோரிய போதுகூட செல்லம்மாள் தான் உயர்ந்துவிட்டதாக இறுமாப்பு கொள்ளாமல் நிலை மாறாதவராக இருந்ததைக் காண முடிகிறது.பாரதி வெளிப்படையாக சமுதாயத்துக்காக ஒரு பக்கம் போராடிக்கொண்டே வருகிறபோது, செல்லம்மாள் மறைமுகமாக, மனம், செயலால் நிழலாக வளர்ந்து கொண்டே வந்ததை உணர முடிகிறது. வாழ்நாளையே தன் கணவர் பாரதி மூலமாக இந்த நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளது தெள்ளத் தெளிவாகிறது!