தூரிகை தாரகை!

தூரிகை தாரகை!

-    அனுராதா சேகர்

மக்கெல்லாம் பத்து விரல்கள் தந்த கடவுள். ஓவியர் மாருதிக்கு மட்டும் ஸ்பெஷலாக பத்து brush களை வைத்து படைத்து விட்டார் போலும்..

மனுஷன்  தீட்டி விட்டார் 69 ஆண்டுகளாக அருங்களஞ்சியத்தை.

மாருதியின் ஆரம்ப கால படங்களின் ஆண்கள் அச்சு அவரை போலவே தொங்கு மீசை, கிருதா. சுருள் ஸ்டெப் கட் உடன் இருப்பார்கள்.

ஆனால் பெண்கள் மட்டும் சீசனுக்கு ஏற்ற மாதிரி ஹேமமாலினி, அர்ச்சனா, மீனா, சாய் பல்லவி என  மாறுவார்கள்.

அதிலும் பெண்களின் கண்கள். இமைகள்..கூந்தல். hair clip..ribbon. நகை எல்லாமே. இவர் ரங்கநாதன் தெருவில் ஃபேன்ஸி  ஸ்டோர் வைத்திருக்காரோ என்று  தோன்றும். அவ்வளவு தத்ரூபமாக இருக்கும்.

குடும்ப பாங்கான கதைக்கு ஒவியமா?

தெய்வீகம் கமழும் தீபாவளி அட்டை படமா?

பொங்கல் சிறப்பிதழுக்கு குழந்தையை கொஞ்சும் கிராமியப் பெண்ணா?

அதுவும் உடனடியாக அவசரமாக வேணுமா?

பத்திரிகையாளர்களின் ஒரே சாய்ஸ் மாருதிதான்..

அவரது ஓவியங்களின் அடியில் போடும் கையெழுத்தே தூரிகை மற்றும் வண்ண குப்பி போல இருக்கும்.. அவரது ஓவிய காதல் அத்தனை தீராதது.

ஸ்பெஷல் effect இல். ஃபோட்டோ finish இல் Feel good படங்களை  தந்த தூரிகை தாரகை ஒன்று மறைந்து விட்டது..ஆனால் அது பரப்பிய ஒளியும்  வண்ணமும் கலை அழகும் மறைய கூடியதா என்ன??

வால் செய்தி,

ன்னுடைய முதல் சிறுகதை மங்கை மாத இதழ் நடத்தி போட்டியில் ஆறுதல் பரிசு வென்றபோது அதற்கு  மாருதி படம் வரைந்து இருந்தார். கலர் படம்.

கதையின் தலைப்பு. ஒரு பட்டியல் நீளுகிறது.

அப்போது நான் பத்தாம் வகுப்பு மாணவி..

பரிசுத்தொகை. 100ரூபாய்.

ஸ்கூலில் திட்டுவார்கள் என்று மறைத்து விட்டேன்.

அவ்வளவு புரட்சியான  கதை!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com