

இந்தக் கட்டுரை பாதாள உலகம் குறித்த இந்து, கிரேக்க புராணங்களை எடுத்துக்காட்டி, அயோத்தி மன்னர் சகரன், கபில முனிவர், கங்கை இறக்கம் போன்ற கதைகளை விளக்குகிறது. பின்னர் பூமியை நேர்கோடாக தோண்டினால் இந்தியாவுக்கு எதிரே அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதி வருவதாக கூறி, அங்கு உள்ள Ash Island, Horse Island ஆகியவை சகரர்கள் எரிந்த சாம்பல் தீவு, குதிரை கட்டிய இடம் என இணைத்து, கலிபோர்னியாவே புராண பாதாள உலகம் என வலியுறுத்துகிறது.
பாதாள உலகம் என்பது பூமிக்கு அடியில் உள்ள இடம் ஆகும்.
இது மரணத்திற்குப் பிறகு ஆன்மாக்கள் செல்லும் இடமாகும். அல்லது சட்டத்திற்கு புறம்பான குற்றச் செயல்கள் நடக்கும் மறைவு உலகமாகும். இந்து புராணங்களின்படி பூமிக்கு கீழே ஏழு உலகங்களில் கடைசியாக உள்ளதாகும். அங்கு நாகர்கள் மற்றும் பலம் வாய்ந்த ஜீவன்கள் இருப்பதாக நம்பப்படுகிறது!
கிரேக்க புராணங்களில் இது இறந்தவர்களின் ராஜ்யமாகும். இதை கடவுள் ஆன ஹார்டிஷ் என்பவர் ஆட்சி செய்கிறார்.
புராணங்களின்படி கூறப்பட்ட பாதாள உலகம் இன்றும் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? இதை படித்தால் உங்களுக்கு உண்மை புரியும்.
அதற்கு முன்பாக இந்து புராணத்தை பற்றி பார்ப்போம். அயோத்தி மன்னர் தசரத சக்கரவர்த்திக்கு முன்பு அயோத்தியை ஆண்ட சகரன் என்ற மன்னன் ஒரு சமயம் அஸ்வமேத யாகம் நடத்தினார். சம்பிரதாய படி யாகத்துக்காக பங்கேற்ற குதிரை பூமியை சுற்றிவர அனுப்பப்பட்டது. இதை கேள்விப்பட்ட இந்திரன் மனம் கலங்கினான்.
இந்திரன் தன் பதவிக்கு ஆபத்து ஏற்படும் என கருதி அந்த குதிரையை கடத்தினான். சகரனின் 60 ஆயிரம் மகன்களும் குதிரையை தேடி அலைந்தனர். எங்கும் காணாததால் ஏமாற்றம் அடைந்தார்கள். அவர்கள் பாதாள உலகத்திற்கு சென்று பூமியை தோண்ட ஆரம்பித்தனர். அப்போது பாதாள உலகத்தில் கபில முனிவர் தவம் செய்து கொண்டு இருந்தார் .
அவர் அருகே குதிரை மேய்ந்து கொண்டு இருந்தது.
யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்ற எண்ணத்தில் இந்திரன் அந்த குதிரையை பாதாள உலகத்தில் விட்டு இருந்தான். ஆனால் பாதாள உலகத்திற்குச் சென்ற சகரர்கள் குதிரையை திருடியது கபில முனிவர் என நினைத்து அவரைத் தாக்க முற்பட்டனர்.
கண் விழித்த கபில முனிவர் அவர்கள் அனைவரையும் எரித்து சாம்பலாக்கினார். இந்த விஷயம் அறிந்த சகரன் தன் பேரன் அம்சுமானை அனுப்பி முனிவரிடம் மன்னிப்பு கேட்டான். அதன் பின் குதிரையை மீட்டு யாகம் நிறைவு பெற்றது. ஆனால் சாம்பலான சகரர்கள் சாந்தி அடைய நீண்ட காலம் ஆனது அம்சுமானின் கடும் தவத்தால் வான் உலகில் ஓடிய கங்கை பூமிக்கு வந்தது. அந்த நீரில் சகரர்கள் சாம்பல் கரைக்கப்பட்டு அவர்கள் நற்கதி அடைந்தார்கள்.
இதுதான் பாதாள உலகத்தின் புராணக் கதை. இனி பாதாள உலகத்தின் நிஜ கதைக்கு வருவோம்.
பூமியை தோண்டிகொண்டே போனால் இறுதியில் அமெரிக்காவை தொடலாம் என்பார்கள். நமக்கும் அமெரிக்காவிற்கும் கால கணக்கில் 12 மணி நேரம் ஆகிறது. அப்படி பார்க்கும்போது இது சாத்தியமாகிறது.
அப்படி இந்தியாவில் இருந்து நேர்கோடாக பூமிக்கு அடியில் தோண்டினால் உள்ள இடம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா என்ற இடமாகும்.
இங்குள்ள ஒரேகான் பகுதியில் உள்ள தீவின் பெயர் ஆஷ் ஐலேண்ட் (Ash Island). அதாவது சகரர்கள் எரிந்த பகுதியாகும். இந்த இடத்தை சாம்பல் தீவு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இந்த சாம்பலை கரைத்த கங்கையை இந்த தீவை சுற்றி உள்ள நீர் பகுதியாகும். இங்கு எரிமலைகள் உருவான சாம்பல் படர்ந்த பகுதி சாம்பல் தீவு என அழைக்கப்படுகிறது.
பாதாளம் உலகத்தில் இருந்த கபில முனிவரின் ஆற்றல் தான் பின்னாளில் எரிமலையாக மாறியது. மேலும் இந்திரன் திருடிக் கொண்டு வந்த குதிரை கட்டி வைத்த இடமும் கலிபோர்னியாவில் உள்ளது. அந்த இடத்தின் பெயர் தான் தற்போது ஹார்ஸ் ஐலேண்ட் (Horse Island). இதை குதிரை தீவு என்கிறார்கள்.
இந்த ஆஷ் ஐலேண்ட் தீவில் உள்ள நீர் வற்றுவது இல்லை! கங்கை நீர் என்றாவது வற்றுமா?
நம் புராண காலத்து கபில ஆரண்யா என்ற இடம் தான் தற்போது கலிபோர்னியா எனப்படுகிறது.
கலிபோர்னியாவை இந்த புராணத்தில் இணைத்து பார்க்கும் போது வியப்பாகத்தான் இருக்கிறது.
இதன் மூலம் இன்றைய கலிபோர்னியா பாதாளம் உலகம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது.
இந்து புராணங்களுக்கும் நவீன புவியியலுக்கும் இடையேயான வியக்கத்தக்க தொடர்புகளைப் புரிந்துகொள்வதன் மூலம், நமது பண்டைய வரலாற்றின் மீதான பார்வையை விரிவுபடுத்தி, உலகப் புகழ்பெற்ற இடங்களின் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகளை அறிந்துகொள்ளலாம்.