கவிதை - பூமித்தாயின் குழந்தைகள்!

நெற்கதிர்கள்
நெற்கதிர்கள்

ச்சை வண்ணமே

பசியாற்றும் நெற்கதிரே!

யற்கையின் பேரம்சமே!

பூமியின் வரப்பிரசாதமே!

ழை நீரால் துளிர்விட்டு

அகிலம் காண்கிறாய்!

ழவனுக்கு வாழ்வளித்து

மக்கள் பசி ஆற்றினாயே!

ண்ணில் முளைத்த 

பேரரசன் நீ!

ழை நீரால் வளரும் 

மாணிக்கம் நீ!

சாலையின் இருபுறமும்

விழிகளுக்கு விருந்தளிக்கும்

இயற்கையின் வரமே!

தென்றலில் தலையசைத்து

மழையிலே நீராடி

வெயிலிலே ஒளியேற்றி

றுவடையில் கைகளிலே 

தவழ்கிறாய்!

பூமித்தாயின் சின்னஞ்சிறு குழந்தைகளே  

உயிரூட்டிய உழவனுக்கு செய்நன்றி மறவா

மாணிக்கமே!

ழவனின் கரங்களில் தவழ்கையில்

உனைச் சுமந்தவளும் ஆனந்தம் கொள்வாள்..!

-ரா.வ. பாலகிருஷ்ணன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com