கவிதை - மழைப் 'பூ'!

Rain image...
Rain image...

-ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி

ணித்ததைக் கடந்தும் 

பேய் மழை தொடர்ந்தது,

சூறைக் காற்று வீசும்

வேகம் நூறு தொட்டது!

பாதைகள் எல்லாம்

பள்ளங்கள் ஆனது,

விழுந்த மரங்களால்

வீதிகள் நிறைந்தது!

மக்களின் போக்கிடம்

அரசுப் பள்ளிக்கூடம்!

ஒன்டிய முகங்களுக்குள்

மண்டிக் கிடக்குது பரபரப்பு!

இழந்ததை நினைக்கையில்

என்னடா வாழ்க்கை?? "தூ"!

கட்டடத்தின் முன் நின்ற 

செம்பருத்திச் செடிக்கும்,

அருக்காணி பெத்தெடுத்த

ஏழாப்பு மகளுக்கும், 

சில்லென்று குறு குறுத்து,

சிவந்து வெளிப்படுது "பூ"!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com