கவிதை - மனிதம் புத்தகம் அவ்வளவுதான்!

-கவிதை!
wedding image
wedding image

- லட்சுமி

ரெங்கும் களை கட்டி

திருமண பந்த

புத்தகத்தின் முதல் பக்கத்தின்

தொடக்க நாள் விழாவில்

இரண்டாயிரம் உறவுகளின்

மகிழ்ச்சியில் மனிதம்!

ஆறாம் மாதம் மசக்கையின்

ஆயிரம் உறவுகளின் மகிழ்ச்சி விளிம்பில்

புத்தகத்தின் ஆறாம் பக்கம்!

ஒன்பதாம் மாதம் வளைகாப்பில்

நானூறு உறவுகளின்

மகிழ்ச்சி வளையல்களின் ஓசையுடன்

புத்தக பக்கங்களின் மனிதம்!

பத்தாம் வருடமோ

பத்து உறவுகளின் பொறாமை

பக்க புத்தகங்களின் எண்ணிக்கையோ

முந்நூறு!

அறுபது வயதில் முதியோர் இல்ல

சன்னல் கம்பிகளில் ஒட்டிய

காய்ந்த இலைகளுடன்

சுருங்கிய கண்ணீர் கண்களுடன்

வாழ்க்கை தத்துவங்கள்

நிறைவுரையுடன் மனிதம் புத்தகம்!!!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com