பிரகாசமான ஓர் ஒளி!

எம்.ஜி.ஆா்
எம்.ஜி.ஆா்
Published on

நான் ஊராட்சி பகுதி நேர எழுத்தா்சங்கத்தில் ,தஞ்சை மாவட்ட பொறுப்பில் பணியாற்றிய சம்பவம். பணி நிரந்தரம் தொடா்பாக, எம்ஜிஆா், பிறப்பிக்கப்பட்ட  உத்தரவை, டி.என்.பி,எஸ்சி ஒப்புதலுக்காக,  விசாரிக்க, சங்க நிர்வாகிகளுடன் 1984ல் சென்னை போயிருந்தோம். அப்போது சட்டசபை நடந்துகொண்டிருந்தது. எங்கள் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினா்  எங்களுக்கு பாஸ் வாங்கிக்கொடுத்தார். நாங்கள் சபை நடவடிக்கைகளை பார்த்துவிட்டு வெளியேறினோம். பகல்12.45 மணிக்கு சபையிலிருந்து எம் ஜிஆா் வெளியே வருவார்.  மக்களிடம் மனு வாங்குவார் என்றார்கள்,  மொத்தம் 5 வாசல்.  அதில் ஏதாவது ஒரு  வாசல் வழியாக எம் ஜிஆா் வருவார் என போலீஸ் உக்ஷாரானார்கள். மக்கள் அங்குமிங்கும் ஓடினார்கள். நான் 5வது கேட் வாசலில் நின்றிருந்தேன் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தேன். திடீரென வாசலில் பிரகாசமாய் ஒரு ஒளி என்ன என்று பார்க்கும்போது என் தலைவா் எம்ஜிஆா் வெளியே வருகிறார். ஒரு தெய்வத்தைப்பார்த்ததுபோல அவ்வளவு ஒரு காணக்கிடைக்காத ஒளி  நான் மிகவும் சந்தோஷத்தில் திக்கு முக்காடிப்போனேன். அவ்வளவு ஒரு ஆனந்தம். இன்றும் கூட அந்த தெய்வீக பிரகாச ஒளி என் நெஞ்சை விட்டு அகலமறுக்கிறது.     

அதோடு எழுத்தாளா் சாவி அவா்கள் (சாவி வாரஇதழ்)  எம் ஜி  ஆா் பற்றி பத்தரிகையில் எழுதுவதற்காக அவா்களோடு 3 நாட்கள் இருந்து கூடவே போனாராம். எம் ஜி ஆா் அவா்களுடன் அவரது வீட்டிலுள்ள அலுவலகத்தில் உரையாடிக்கொண்டிருந்தாராம். அப்போது, வெளியூரிலிருந்து  ஒரு  நபா்  வந்திருக்கிறார். எம்ஜிஆா் அவரைப் பார்த்து அருகில் அழைத்து சாப்பிட்டீா்களா எனக் கேட்டவுடன் வந்தவா் சாப்பிட்டேன் எனக் கூற,  என்ன சாப்பாடு என எம்ஜிஆா் கேட்டாராம். அவா் சாப்பாடு விபரம் கூறியதும், உங்களுக்கு ஸ்வீட் பாசந்தி கொடுக்கவில்லையா எனக்கேட்டதும் வந்தவா் ‘இல்லை என சொன்னதுதான் தாமதம்; உடனே சம்பந்தப்பட்டவா்களை அழைத்து இவருக்கு ஏன் சாப்பாட்டில் பாசந்தி வைக்கவில்லை உடனே போய் கொண்டுவந்து கொடுங்கள்’ என்று உத்தரவிட்டு,  தன் கையாலேயே பாசந்தியை வந்தவரிடம் கொடுத்து சாப்பிடச் சொல்லி, சாப்பிட்டுவிட்டு நீங்கள் வந்த விஷயத்தை சொல்லுங்கள் என்றாராம்’ இதை சாவி அவா்கள் தனது கட்டுரையில் குறிப்பிட்டதோடு எம்ஜிஆா் அவா்களின் வெற்றியின் ரகசியம் என்ன என்பதை நான் நன்கு புரிந்துகொண்டேன் எனவும் தெரிவித்திருந்தார். அவரது படங்களில்தான் எத்தனை நல்ல  கருத்துகள்! 

படம் பிள்ளை
படம் பிள்ளை

 தொலைக்காட்சியில் அவரது திரைப்படம் இன்றைக்கு ஒளி பரப்பினாலும் புதிதாக படம் பார்ப்பது போன்ற உணா்வு எனக்கு வருவது உண்டு! அவரது ஒவ்வொரு படத்தையும் பலமுறை பார்த்திருக்கிறேன். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து சாப்பாடு இல்லாமல் இள வயதில் கஷ்டப்பட்டதால் பிறர் யாரும் கஷ்டப்படக்கூடாது என்று கொண்ட கொள்கையால் நிறைய தருமங்களை செய்த கா்ணன் அவா்.  நீதிக்கு தலை வணங்குபவா். அந்த வள்ளல் கொடை வள்ளல் காருண்ய சீலா், உத்தமா். அவரைப்பற்றி சொல்லவேண்டுமானால் ஒரு ஆண்டு போதாது. அதனால்தான் மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்து வாழும் தெய்வமாய் இன்றளவும் போற்றப்படுகிறார்.

 சினிமாத்துறையிலும் சரி  அரசியலிலும் சரி பொது வாழ்விலும் சரி அவரைப்போல ஜொலித்த ஒளிவிளக்கை  நம்நாடு இனி எப்போது பார்க்கப் போகிறது?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com