ரிசர்வ் செய்திருந்தால்தான் சாமி தரிசனம்

ரிசர்வ் செய்திருந்தால்தான் சாமி தரிசனம்
Published on

துபாயில் பிரம்மாண்டமான இந்து கோயில் திறப்பு

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தின் நகரமான துபாய் நகரின் ஜெபல் அலி பகுதியில் இந்து கோயில் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இது இந்திய மற்றும் அரபு கட்டிடக் கலையை இணைத்து இந்தக் கோயில் மிகவும் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. துபாய் அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் மற்றும் அமீரகத்திற்கான இந்திய தூதர் சஞ்சய் சுதீர் ஆகியோர் இணைந்து கோயிலின் தொடக்க விழாவில் பங்கேற்று இருந்தனர். அர்ச்சகர்கள் ‘ஓம் சாந்தி ஓம்’ என மந்திரம் சொல்ல, மேளதாளங்கள் முழங்க அமர்க்களமாக இந்த விழா நடந்துள்ளது.

சகிப்புத்தன்மை, அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாக இந்தக் கோயில் இருப்பதாக துபாய் அமைச்சர் கூறினார் . இந்தக் கோயில் அமைந்துள்ள பகுதி ‘வழிபாட்டு கிராமம்’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு 7 தேவாலயங்கள், குருநானக் தர்பார் சீக்கிய குருத்வாரா மற்றும் இந்து கோயில் ஒன்றும் அமைந்துள்ளது.

அமீரகத்தில் உள்ள மிகவும் பழமையான இந்து கோயிலான சிந்தி குரு தர்பார் கோயிலின் விரிவாக்கம் தான் இது. சுமார் 70,000 சதுர அடி கொண்ட வளாகத்தில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் உட்புறம் முழுவதும் பளிங்குக் கற்களால் அமைந்துள்ளது. இதன் தளத்தில் மணிகள் அமைந்துள்ளன. வெளிப்புறத்தில் இந்திய மற்றும் அரபு கலைகளை கொண்டு அழகுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் தூண்களிலும் இந்த கலைநயம் தென்படுகிறது.

கோயிலில் மொத்தம் 16 தெய்வங்கள் எழுந்தருளி உள்ளன. இந்தக் கோயிலின் பிரதான பிரார்த்தனை அறையின் மையப்பகுதியில் பிங்க் நிறத்தில் தாமரைப் பூ 3டி வடிவில் பதிக்கப்பட்டுள்ளது. 1000 முதல் 2000 ஆயிரம் பேர் வரையில் இந்தக் கோயிலில் தரிசனம் மேற்கொள்ள முடியும். தினசரி காலை 6.30 முதல் மாலை 8 மணி வரையில் கோயிலில் தரிசனம் செய்யலாம். ஆனால், இந்த கோயிலுக்கு சென்று தரிசனம் மேற்கொள்ள முன்பதிவு அவசியம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com