Seniors and Technology
கல்கி
முதியவர்கள் முன் விரியும் டிஜிட்டல் உலகம்!
ஒருகாலத்தில் 'இளைஞர்களுக்கு’ மட்டுமே என்றிருந்த தொழில்நுட்ப உலகம் இப்போது முதியவர்களுக்கும் முக்கியமான ஒன்றாகிவிட்டது. தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வேகமாக முன்னேரி வரும் இந்த உலகில், முதியவர்களும் தங்கள் வாழ்க்கையில் டிஜிட்டல் சாதனங்களை சிறிது சிறிதாக இணைத்துக் கொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள். இதன்மூலம் கம்பீரமான முறையில் முதுமையை அவர்கள் எதிர்கொள்கிறார்கள். தங்கள் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் இருந்து டிஜிட்டல் சாதனங்கள் வரை பயன்படுத்திக் கொள்கிறார்கள். UPI போன்ற டிஜிட்டல் வழி பணம் செலுத்துதல் என்பது அவர்கள் வாழ்க்கை முறையின் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாகி விட்டது. இதன் மூலம் அவர்களுக்கு சுதந்திர உணர்வு, பிறருடன் தொடர்பு மற்றும் வசதி ஆகியவை முன் எப்போதும் இல்லாத அளவில் கிடைக்கின்றன.