

-அருண் சரண்யா
'டாக்டர்!"
"ஓ, மிஸ்டர் குமாரா? சென்னையின் வி.ஐ.பிக்களில் ஒருவர் என்னைத் தேடிவர நான் கொடுத்து வச்சிருக்கணும். என்ன சாப்பிடறீங்க, லெமன் டீ?" "நோ தாங்க்ஸ். பை தி வே, மனவியல் மருத்துவரிடம் வரவங்க கொடுத்து வச்சவங்க இல்லேன்றது என் கருத்து."
''சைகிரியாட்ரிஸ்ட் என்பவன் யாரு? ஒரு சுமைதாங்கி மனபாரத்தை இறக்கி வைக்கலாம். ஒரு நல்ல நண்பன் - சரியான பாதை காட்ட உதவுவான். மற்றபடி இதிலே குற்ற உணர்ச்சிக்கே இடமில்லே."
"ஓக்கே டாக்டர்... நானும் சுதாவும் பேசிக்கிட்டே ஒரு மாசமாச்சு.''
"அதாவது உங்களுக்கும் உங்க மனைவிக்குமிடையே ஏதாவது பிரச்னைன்னு சொல்ல வரீங்களா?"
"ஆமாம். அப்பா அம்மாவின் பலத்த எதிர்ப்பையும் மீறி ஒரு லட்சிய வெறியோடுதான் சுதாவைக் கல்யாணம் செய்துக்கிட்டேன். ஆனா நான் எதிர்பார்ப்பது அவளது மென்மையான அன்பைத்தானே தவிர, ஆக்கிரமிப்பை அல்லன்றதைப் புரிஞ்சுக்க மாட்டேங்கிறா. போன மாதம்கூட ஒரு முக்கிய கான்ஃபரன்ஸிலே கலந்துக்கிட்டப்போ செல்போனிலே உங்க தலைவலி எப்படி இருக்கு?'ன்றா!''
"அவங்களுக்கு நீங்க கான்ஃபரன்ஸிலே இருக்கீங்கன்றது எப்படித் தெரியும்? ஒரு பரிவு உணர்ச்சிதானே!'