
-பாரதி சந்திரன்
நான் ஒரு புகழ்மிக்க பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பில் இருக்கிறேன். இன்றைக்கு ஒரே வெறுப்பாக இருக்கிறது.
பின்னே என்னவாம்? உதவி ஆசிரியர் வேலைக்காக விண்ணப்பித்து நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்த இளைஞர்களில் ஒருத்தரும் சரியில்லை.
பத்திரிகைத் துறைக்கு வரவேண்டும் என்று நினைப்பவர்கள் ஓரளவாவது உலக விஷயம், இலக்கியம், வரலாறு தெரிந்தவர்களாக இருக்க வேண்டாமா?
வந்திருந்தவர்களின் அடிப்படை ஞானத்தைப் பரிசோதிக்க எளிமையாக ஒரு சொல்லில் விடையளிக்கும் வகையில் நூறு கேள்விகள் தயார் செய்து வைத்திருந்தேன். வந்த இளைஞர்களிடம் அதைக் கொடுத்து விடை எழுதச் சொன்னேன்.
இதில் ஐம்பது சதவீத மதிப்பெண்ணாவது பெறுபவர்களிடம் மட்டுமே மேலே இன்டர்வியூ பண்ண நினைத்திருந்தேன்.