
-எஸ். யாதவநாராயணன்
வேப்பமரத்தடியில் நிற்கும் சந்தானத்திற்கு ஒரே பரபரப்பு அடிக்கடி மணியைப் பார்த்துக்கொண்டான். எட்டு மணிக்கு டியூஷன் விடும் என்றார்கள்.
அவனது அத்தை பெண் சுமதி இங்கே படிக்கிறாள். அவளைப் பார்ப்பதற்காகத்தான் சென்னையில் இருந்து வந்திருக்கிறான்.
ரயிலை விட்டு இறங்கியதும், லாட்ஜில் ரூம் எடுத்துக் குளித்துவிட்டு, அவசர அவசரமாக இந்த மரத்தடிக்கு வந்துவிட்டான்.
அவன் இங்கு வந்திருப்பது யாருக்கும் தெரியாது. தெரியவும்கூடாது பாக்கெட்டில் இருக்கும் கடிதத்தை அவளிடம் தந்துவிட்டு. உடனே புறப்பட்டு விடவேண்டும்.
அந்த கடிதம் அவ்வளவு முக்கியமானது. தபாலில் அனுப்பி, அடுத்தவர் கையில் மாட்டிவிட்டால், நல்லதல்ல.
என்னதான் பழகிய பெண்ணாக இருந்தாலும், நேரில் சந்தித்தாலும்... காதல் சம்பந்தப்பட்ட செய்திகளைப் பரிமாறுவதற்குக் கடிதமே வசதியானது.
அந்தக் தெருவிலேயே. வாத்தியார் வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளி இருப்பவன் ராஜு, தினமும் டியூஷன் விட்டுப் போகிற அழகிகளைக் கணக்கெடுப்பதுதான் அவனுடைய முக்கிய பணி. பெர்முடாஸ் போட்டுக்கொண்டு, வெற்று உடம்பாய்க் காட்சி தருவான்.
அவனுக்கு மரத்தடியில் நிற்கும் சந்தானத்தைப் பாத்ததும் மூக்குப் புடைத்தது.
ஜீன்ஸ் பேண்ட், டீ ஸர்ட் ஸ்போர்ட்ஸ் ஷூஸ், கூலிங்கிளாஸ், இடுப்பில் கேமரா என இருக்கும் சந்தானத்தைப் பார்த்து ராஜு எரிச்சல் அடைந்தான்.