
-சுப்ரமணியன் ரவிச்சந்திரன்
"கீழத் தெரு சந்திரகாசு வல்லி யாப்பா?" தலைவர் கேட்டார்.
"சந்திரகாசு சந்திர காசு.." யாரோ பின் பக்கம் திரும்பி உரக்க அழைத்தார்கள்.
"ப்ச்... என்னப்பாது என் வூட்டு சடங்குக்கா கூப்டருக்கேன். ஊர்ப் பொதுக்காரியம். சாமி சமாசாரம். மண்ணாங்கட்டிய உட்டு ஒவ்வொரு வூடா ஏறி எறங்கச் சொல்லியிருக்கேன். ஆளக் காணவே அர நாளானா என்னிக்கி வரவு செலவ முடிக்கறது?"
"அய்யா!" சந்திரகாசு வந்து நின்றான்.
"என்னப்பா. கலெட்டராடடம் வரே. ஆள் வரதே இப்படி இருந்தா ஒங்கிட்டேந்து காசு வரது எப்பிடி... கணக்கப்பிள்ளை, படிங்க.."
கணக்குப்பிள்ளை என்பவர் யாரோ ஒரு மிராசுதாருக்கு எப்போதோ இருந்தவர். பெருங்காயப் பாண்டம்; பழைய பேர் மட்டும் இன்னும் அழைப்பதற்கு...
"போன வருச பாக்கியே அறுவத்து நாலு ரூபா.. இப்ப நானூத்துப் பண்ணன்டு- ஆகக் கூடி
"என்னது போன வருசமா... அதான் கிச்சான் கைல குடுத்து அனுப்சனே அப்பியே..."
கிச்சான் பெயரை உச்சரித்ததும் கூட்டத்தில் சிரிப்பு எழுந்து அமர்ந்தது..
''இது சவுரியமான வழிடா கிச்சாள் செத்துப்பூட்டான். காந்தி கணக்கா..?"
"அவன் இருந்திருந்தாலும் கணக்கப் பிள்ளைட்டயா காசு வரும். கருவேலப் பொதர்ல போதையாக் கரைஞ்சிருக்கும். சந்திரகாசு சுத்துக்கிட்டாண்டா டோய்.."