

-பாரதி பாஸ்கர்
"திருமணத்துக்கு வெளியே என்னோடு ஓர் உறவு வைத்துக்கொள்ள உனக்கு விருப்பமா?"
பதற்றமேயில்லாமல் சிரித்த முகத்துடன் மேலதிகாரி அஜய் குப்தா கேட்டவுடன் வித்யா பதறிப்போனாள். அவனோடு அவள் அத்தனை நேரம் விவாதித்துக் கொண்டிருந்த எம்ஐஎஸ் எனப்படும் தகவல்கள் அடங்கிய பேப்பர் அவள் கையில் நடுங்கியது. என்ன செய்வது இப்போது? தமிழ் சினிமா கதாநாயகி மாதிரி பளாரென்று கன்னத்தில் அடிப்பதா? கண்ணாடிச் சுவர்களுக்கு வெளியே மௌனப்படம் மாதிரி இயங்கிக் கொண்டிருக்கும் அலுவலகம் அப்படியே ஸ்தம்பிக்காதா? 'செருப்பு பிஞ்சிரும்டா ராஸ்கல்' என்று ஆங்கிலத்தில் எப்படிச் சொல்வது? அவளுடைய இன்னொரு மேலதிகாரியான தீபிகா கன்னா மாதிரி, செல்லமாக முகவாயைத் தட்டி 'டோன்ட் பீ நாட்டி அஜய்' என்று சொல்லவேண்டுமா? அந்தச் செய்கைக்கு சரி என்று அர்த்தமா, வேண்டாம் என்று அர்த்தமா?
வித்யா பதறிப்போகையில் அஜய் குப்தா நிதானமாக அவளுக்கு ஒரு தம்ளர் தண்ணீர் எடுத்துக் கொடுத்துவிட்டு,