சிறுகதை: உதவி..!

Artist: Jeyaraj
Short Story in Tamil
Published on
Kalki Strip
Kalki Strip

-ரிஷபன்

ந்திரன் வந்தபோது, புவனா மட்டும்தான் வீட்டில் இருந்தாள்.

"வாங்க. வனஜா நல்லா இருக்கா..."

கதவைத் திறந்தபடி புவனா விசாரித்தாள். சந்திரன் தலையசைத்ததை அவள் கவனித்திருக்க வாய்ப்பில்லை. உபசரணைக் கேள்வி.

"அண்ணன் இல்லியா..." என்றான் தயக்கமாய்.

நேற்று பதின்மூன்று ரூபாய் முப்பது காசு செலவழித்து ஃபோனில் பேசியிருந்தான்.

"அண்ணே... ஒரு முக்கியமான விஷயம். நேர்ல பேசணும். நாளைக்கு வரட்டுமா...''

"எதுக்குடா அலைச்சல். என்ன விவரம்… சொல்லேன்...''

"நேர்லயே வரேனே..."

வரச் சொல்லி சம்மதம் தரப்பட்டது.

''வந்திருவாரு. நீங்க வருவீங்கன்னு சொன்னாரு. ரொம்ப முக்கியமான விஷயம். அவரு நேர்ல போனாத்தான் முடியும்... அதான் போயிருக்காரு..."

சந்திரன் நீட்டிய மஞ்சள் துணிக் கடைப் பையில் ஒரு டஜன் வாழைப் பழங்களும், சற்றே வாடிய பூச்சரமும் இருந்தன.

புவனா பிரித்துக்கூடப் பார்க்கவில்லை. மேஜை மீது வைத்துவிட்டாள்.

"அருண் எப்ப ஸ்கூல்லேர்ந்து வருவான்..."

"நாலரை ஆவும்...''

என்ன விலக்கினாலும் மீண்டும் வந்து படிகிற பாசிக் குளம்போல மௌனம் மறுபடி வந்து கவிழ்ந்தது.

Archives 1998 K Sep – Oct stories Kumar sir / உதவி ரிஷபன் 27.9.98  66 பட்சம். இன்றைய நிலையில் தேவை ஒரு உதவிக் கரம். ஒரு அன்னியனைவிட அண்ணன் ரத்த சம்பந்தம் உள்ளவன். சதை ஆடும். துடிப்பு புரியும்.

''பிசினஸ் எப்படி.. நல்லா போவுதா..."

புவனாவின் குரல் அவனைக் கிழித்ததுபோல உணர்ந்தான்.

"வனஜாவுக்குப் புதுசா எதுவும் செஞ்சிங்களா..."

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com