
-ப.கோ. ரகுராமன்
"சார்... உங்களை மானேஜர் கூப்பிடுகிறார்" என்றான் பியூன் கந்தையா.
எனக்கு நடுக்கமாக இருந்தது. புது மானேஜர். இளைஞன். கொஞ்சம் அடாவடி டைப் என்று பேச்சு இருந்தது.
நடுங்கியபடியே உள்ளே போய், "சார்..." என்றேன்.
"யெஸ்!" என்றவன், என் கையில் 'பைல்' ஒன்றைத் திணித்தான்.
"யார் வேலை இது?"
பைலைப் பிரித்தேன். எக்ஸ்போர்ட் கொட்டேஷன்.
"சார்... பத்மாம்மா."
ப்யூனை அழைக்கும் பொத்தானை அழுத்தினான்.
''பத்மாம்மாவை நான் வரச் சொன்னேன்னு சொல்லு..." என்றான்.
கந்தையா காணாமல் போனான்.
"சார்.. ஏதும் தப்பு பண்ணிட்டாங்களா?"
"ம்ம்"
பத்மாம்மாவை நினைத்தபோது பரிதாப உணர்ச்சி வந்தது.
"சார்... அவங்க லீவ்ல இருந்து ஜாயின்ட் பண்ணி ரெண்டு நாள்தான் ஆகுது. அதோட...கார் ஆக்ஸிடென்டில் ஹஸ்பெண்டையும், ஒரே சன்னையும் இழந்தவங்க."
''இருக்கட்டுமே.... அதுக்காக வேலையில தப்பு பண்ணலாமா? சம்பளம் வாங்குறாங்கல்ல...?"
பத்மாம்மா, 'என்னவாக இருக்கும்?' என்ற கவலை ரேகைகள் முகத்தில் தெரிய, உள்ளே நுழைந்தார்கள்.
"யெஸ்.... நீங்கதானே எக்ஸ்போர்ட் கொட்டேஷன் பார்க்கிறது?"