சிறுகதை; காதல் வந்த நேரம்!
"இந்தச் சனியனே இப்படித்தான்.. கடைசி நேரத்தில் என்னத்தையாவது சொல்லிக் காலை வாரி விட்டு விடுவாள்...'' என்று அலுத்துக்கொண்டாள் வந்தனா.
அறுபது ரூபாய் கொடுத்து, அந்தச் சினிமாவுக்கு மூன்று டிக்கெட்டுகளை வாங்கி வரச் சொன்னவளே அவள்தான். இப்போது ஒரு ரூபாய்த் தொலைபேசியில், "ஸாரிடி! ரொம்ப அவசரமான வேலை வந்துடுச்சு. நான் படத்துக்கு வர முடியல்லை..." என்கிறாள் அந்தச் 'சனியன்' சுந்தரா.
"இப்ப என்னடி செய்யறது? மூணாவது டிக்கெட்டை யாருகிட்டக் கொடுக்கறது?' என்று கேட்டாள் வந்தனா.
''தியேட்டர் வாசல்லே யாருகிட்டேயாவது 'பிளாக்'கிலே தள்ளி விடலாமா?" என்று யோசனை கேட்டாள் சங்கீதா.
"அதுக்கெல்லாம் துப்பு வேணும். நம்மகிட்டே 'ஒயிட்'டிலேயே யாரும் வாங்க மாட்டாங்க" என்றாள் வந்தனா.
தியேட்டர் வாசலில் சொல்லி வைத்த மாதிரி. கொஞ்சம் நாகரிகமாக உடையணிந்த ஒரு பெண் இவர்களை நோக்கி வந்தாள். இவர்கள் 'எக்ஸ்ட்ரா' டிக்கெட்டைக் கையில் வைத்துக்கொண்டு தவித்தது அவளுக்கு எப்படித் தெரியுமோ!
"அக்கா... உங்ககிட்டே எக்ஸ்ட்ரா டிக்கெட் எதுனாச்சும் இருக்குமா. ஒரு டிக்கெட் வேணும்." என்று கேட்டாள் அந்தப் பெண்.
''ஒரு சினேகிதிக்காக வாங்கினது இருக்கும்மா. அவளை இன்னும் காணலே. வராளான்னு கொஞ்ச நேரம் பார்த்துட்டுத் தரேனே.."