

-கமலா சடகோபன்
கூடத்தில் வரிசையாக வைக்கப்பட்டிருந்த பொருட்களை குணாளன் மேற்பார்வை இட்டார். வெற்றிலை, மஞ்சள் பொடி, சந்தனம், புஷ்பங்கள், பழங்கள், தேங்காய்....
அவருடைய ஒரே பெண் மீனாவுக்கு அன்று பதினெட்டாவது பிறந்த நாள். கோயிலுக்குச் சென்று விசேஷ பூஜை செய்வது வழக்கம்.
மீனாவுக்காகத்தான் இத்தனையும். அவளுக்குக் கல்யாணம் ஆகும்போது, கோயிலிலும் ஒரு கல்யாணத்தைச் செய்துவைக்கலாம் என்று நினைத்தவுடன் புளகாங்கிதத்துடன் புன்னகை புரிந்தார்.
குணாளனுக்கும் புனிதாவுக்கும் திருமணம் முடிந்து ஒரு மாமாங்கம் சென்றும் குழந்தை பாக்கியம் ஏற்படவில்லை. அவருடைய தாயாதி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வயதான கிழவி, கோயிலில் சிலை ஒன்று செய்துவைத்தால், உடனே குழந்தை பிறக்கும் என்று சொன்னாள்.