
-ராஜேஷ் குமார்
"ஸார்..."
கம்ப்யூட்டரில் ப்ரிண்ட் அவுட் எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்த நான், ப்யூன் மாரியின் குரல் கேட்டு நிமிர்ந்தேன்.
"என்ன மாரி..?"
"உங்களைப் பார்க்க ஒரு பொண்ணு ஆபீஸ் ரிசப்ஷன்ல வந்து காத்திட்டிருக்கு ஸார்"
நான் நெற்றியைச் சுருக்கினேன்.
"பொண்ணா...?"
"ஆமா ஸார்..."
நான் கம்ப்யூட்டரை அணைத்துவிட்டு எழுந்தேன். மனதில் நிரப்பிக்கொண்ட வியப்போடு நடந்தேன்.
என்னைத் தேடி... ஒரு பெண்..! அதுவும் ஆபீஸுக்கு...?
யாராக இருக்கும்...?
ஒரு நிமிஷ நடையில் ரிசப்ஷனுக்கு வந்து சோபாவில் உட்கார்ந்திருந்த அந்தப் பெண்ணைப் பார்த்ததும் என் வியப்பின் சதவீதம் உச்சத்துக்குப் போயிற்று.
காரணம்...?
போன வாரம் வியாசர்பாடியில் எனக்காக பார்த்துவிட்டு வந்த பெண். காயத்ரி.
"காயத்ரி...! நீயா...?"
அவள் தயக்கமாய் எழுந்து நின்றாள். ஸாரி...! ஆபீஸ் நேரத்துல வந்து உங்களுக்குத் தொந்தரவு தந்துட்டேன்..."
''பரவாயில்லை...! என்ன விஷயம்... சொல்லு..."
''உங்களுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதம்னு கேள்விப்பட்டேன்... உண்மையா...?"
"உண்மைதான்..."
"எனக்கும் உங்களைக் கல்யாணம் பண்ணிக்க இஷ்டம்தான். இருந்தாலும் நாளைக்குக் கணவரா வரப்போகிற உங்ககிட்ட என்னைப் பத்தி ஒரு உண்மையைச் சொல்லிடறது உத்தமம் இல்லையா?"