
-சத்தியப்பிரியன்
புதன்கிழமைப் புயல் இன்னும் வீசத் தொடங்கவில்லை. பேட்டிக் கட்டுரைகள், சிறுகதைகள் என்று அனைத்தும் சீஃப் எடிட்டர் மேஜைக்குப் போயிருக்கின்றன. சனிக்கிழமை வெளிவரும் எங்களது வாரப் பத்திரிகைக்கு எல்லாம் ஆயத்த நிலையில்.... என்னுடைய பகுதிக்கான மேட்டர் மட்டும் இன்னும் தயாராக இல்லை.
"சுமன்! என்ன உங்க ஆலோசனைப் பகுதி மேட்டர் ரெடியா?" எடிட்டர் அறையிலிருந்து இன்டெர்காம் அழைப்பு வந்தது.
"இதோ ரெடியாயிடும் சார்."
"இன்னிக்குச் செவ்வாய்."
"இன்ட்ரெஸ்டிங் லெட்டர்ஸ் எதுவும் வரலை சார்."
"நீ என்ன செய்வியோ தெரியாது. நைட்டு எட்டு மணிக்கு என் டேபிளுக்கு ஆலோசனை நேரம் பகுதிக்கான மேட்டர் ரெடியா இருக்கணும்."
"கண்டிப்பா ஸார்."
மற்ற பத்திரிகைகளில் வருமே உடல் நலம். மனநலம், சட்ட ஆலோசனை, பொருளாதார ஆலோசனை அதுபோல் இல்லாமல், எந்த விஷயத்தின் மீதான சந்தேகத்திற்கு கேட்கப்படும் விஷயத்தை அடிவரை ஆராய்ந்து கட்டுரையை வெளியிடுவோம். அதனால் ஆலோசனை நேரம் பிரபலமானதைத் தொடர்ந்து,சுமன் என்ற பெயரும் வாசகர்
மத்தியில் மிகப் பிரபலமான ஒன்றானது. சுப்பிரமணியன் என் முழுப் பெயர்.
"மத்யான தபால் எடுக்க ரங்கசாமி போய்ட்டானா?" என விசாரித்தேன்.
போயிருப்பதாகத் தகவல் வந்தது.