
-சுப்ரமணியன் ரவிச்சந்திரன்
மேலாகப் பார்வையிட்டான். சுவரே பொத்துப்போகும் அளவிற்குப் படங்கள். குணசீலம் பெருமாளின் படமும்கூட இருந்தது...
"அவளுக்கு சாமின்னா அப்படி ஒரு பித்து... தபோவனம் ஸ்வாமிகள்ட்ட கொழந்தையா இருக்கறச்சே அழச்சிண்டு போனோம். அந்த வாசனை... அவர் ஆசீர்வாதம் பண்ணவ." பெண்ணின் தகப்பனார், ரிடையர்டு வாத்தியார், சீனுவின் பார்வையை உத்தேசித்து விளக்கினார்.
"ராமுவும் கொஞ்சம் கோயில் குளம்னு போவான்..."
அவர் கையை மேல் நோக்கிக் காட்டினார்.
‘பெண் காப்பி கொடுத்தாள்.
நல்ல கலவை. தம்ளரின் விளிம்பில் சின்ன கரிப்புள்ளி.
குமுட்டி விசிறியபோது பறந்து வந்திருக்கலாம். சமையலறையைக் கடந்தபோது குமுட்டியைப் பார்த்திருந்தான்.
ராமு காப்பி சாப்பிட மாட்டான். டீதான். இதை இப்போதே சொல்லலாமா அல்லது அவனே சொல்லிக்கொள்ளட்டுமா...
''இந்த காலத்துல இப்பிடி கெடைக்கறது அதிசயம்தான் ஸார். வேலை பாக்கப் போற பொண்ணு - டிகிரிகூட வேண்டாம்னு சொல்லியிருக்கார்.
எம் பொண்ணுக்கு இப்பக்கூட எதாவது வேலை பண்ணி வைக்கமுடியும்... நிறைய ஸ்டூடண்ட்ஸ் எம் பேச்சைக் கேக்க இருக்கா..."