

-நா. நாகராஜன்
வழக்கம்போல வருடா வருடம் ஆகஸ்ட் அல்லது செப்டெம்பரில் புது அப்பரெண்டிஸ்கள் டிப்ளமா படித்த கம்ப்யூட்டர் பயிற்சியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
பொதுவாக வள்ளியூர் அல்லது மீன்சுருட்டி பக்கத்தில் இருந்து வந்த, அலுவலகத்தை வாய் பிளந்து பார்க்கிற கிராமத்து அத்தியாயங்களாகவே நிறைய பேர் இருப்பார்கள்.
சில நாட்களில் ஆர்வமாக இயந்திரத்தை இயக்கப் பழகி அன்புடன் பேச ஆரம்பித்து விடுவார்கள்.
இந்தத் தடவை விதிவிலக்காக மதுரையில் இருந்து மனீஷா கொய்ராலா ஜாடையில் மதுமிதா என்ற பெண் வெள்ளை நிற தேவதையாய் சிவப்பு நிற உடை பறக்க, படபடக்கும் விழிகளுடன் கண்ணாடிக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்ததும் உயர் அதிகாரியிலிருந்து உட்காரச் சொல்லும் பியூன் வரை உலகத்தை மறந்து போனார்கள்.
தேவராஜன்தான் முதலில் தன்நிலைக்குத் திரும்பி, "பார்ட்டி டக்கர் இல்லே" என்றான்.
"நிஜமாவே அழகுதான்..." என்றார் சீனியர் ஆபரேட்டர்.
அவர் வயதுக்கு அதுதான் சொல்லமுடியும்.