

-கார்த்திகா ராஜ்குமார்
நான் கே.கே.யின் வீட்டிற்குப் போனபொழுது அவன் இல்லை, என் எதிர்பார்ப்பின்படியே. கடந்த சந்திப்பிற்குப்பின் இருந்த தொடர்புகள் ஏதுமில்லாத மூன்று வருடங்களை உதைத்துத் தள்ளுகிற இனிய அதிர்ச்சியை அவன் வீட்டிலிருந்துதான் நான் அவனுக்குத் தர வேண்டுமென்று யோசித்திருந்தேன். அவன் யாரோ ஒரு '×' ஐ எதிர்பார்த்துக் கொடுத்திருந்த சாவியை நான் வாங்கிக்கொண்டு... வீட்டிற்குள் ஒளிந்துகொண்டு, மாயமாய் எதிர்பாரா தருணத்தில் அவன் முன் குதித்து அசத்த வேண்டும் என்று நினைத்தேன். வார்ட் ரோபின் அருகில் உள்ள மறைவுப் பகுதியில் ஒளிந்துகொண்டு காத்திருந்தேன்.
"ஷனு... எனக்குத் தெரியுமே. காப்பி ரெடிதானே..." என்றபடி வந்தான் கே.கே. அதிர்ந்தேன். எனில்...ஷனு- அவன் மனைவி - உள்ளேதான் இருக்கிறாளோ? அதெப்படி? பூட்டைத் திறந்து உள்ளே நுழைந்தேனே நான்?!
"ஷனு... காப்பி அட்டகாசம். இன்னைக்கு உன் ப்ரண்ட் ஜோதியைப் பார்த்தேன். ஆனா அவ என்னைக் கவனிக்கலை. யார் கூடவோ பேசிட்டு..."
கே... கே... பேசியபடி பாத்ரூமிற்கோ/பெட் ரூமிற்கோ போயிருக்கவேண்டும்.