சிறுகதை: அரிசிக் கடை!

ஓவியம்; தமிழ்
ஓவியம்; தமிழ்

-செ.கலைவாணி, மெல்பர்ன்

“ஏங்க! இன்னியோட அரிசி தீர்ந்துபோச்சு. நாளைய சாப்பாடுக்கு என்ன வழி?”

“அல்லி இன்னிக்குச் சாப்பிடு. நாளைக்கு நாளை பார்க்கலாம்...”

“என்னங்க நீங்க சொல்றது... நாளைக்கு மட்டும் எப்படி கிடைக்கும்?”

“நான் ஒரு காலத்தில் அரிசி வியாபாரம் பண்ணேன். ஓகோன்னு இருந்தேன். பணம் இல்லாம பசின்னு வந்தவங்களுக்கு அரிசி தானமாக் கொடுத்தேன். கடையிலே இருந்த பையனை நம்பினேன். படிப்பறிவில்லாததால என்னை அவன் நல்லா ஏமாத்திட்டான். செக்கில கையெழுத்து போடச் சொன்னான். போட்டேன். ஐயாயிரம் ரூபாய்க்கு பதில் ஐம்பதினாயிரமா  மாற்றி எழுதி, கொஞ்சம் கொஞ்சமா பணத்தைச் சுருட்டிட்டு, வேற ஊருக்குப் போயிட்டான்... இப்போ, நான் வீதிக்கு வந்தது மட்டுமல்லாமல் உன்னையும் தவிக்க வைக்கறேன். நல்லவேளை நமக்குக் குழந்தையில்லை…” என்று புலம்பினான் செந்தில்.

“சரி, விடுங்க. பழசைப் பேசறதுன்னால என்னங்க ஆகப் போறது?”

“ஐயா...ஐயா...”

“யாரோ கூப்பிடறாங்க...?”

“நீங்க யாரு? நினைவில்லை எனக்கு. மன்னிச்சிடுங்க.”

"ஐயா, நான்தான் குமரன். என்னை நினைவு இருக்கா ஐயா?

உங்க கடையிலேதான்  அரிசி வாங்குவோம். ஒரு முறை நாங்க நொடிச்சுபோனப்ப நீங்க பணம் வாங்கிக்காம ஒரு மூட்டை அரிசி கொடுத்தீங்க. அப்புறம் பொழைப்பு தேடி வேற  ஊருக்குப் போனோம். மூட்டைத் தூக்கி பையனைப் படிக்க வைச்சேன். என் மகனும் நல்லாப் படிச்சான். வெளிநாட்டு கம்பெனியில் நல்ல வேலை. கைநிறைய சம்பாதிக்கிறான்... உங்களைப் பார்க்கத்தான் வந்தேன். நீங்க நொடிச்சுபோய் கஷ்டப்படறதா சொன்னாங்க. மனசு  வலிச்சது. இந்தாங்க, இதுதான் என் முகவரி. உங்களுக்கு ஏதாவது உதவி வேணும்னா தயங்காம கேளுங்க... இப்போ, இந்த ஆயிரம் ரூபா வாங்கிக்கங்க. வேண்டான்னு சொல்லாதீங்க,” அப்புறம் ஐயா...

இதையும் படியுங்கள்:
ஒவ்வொரு ஆணும் வைத்திருக்க வேண்டிய 3 டி-ஷர்ட்கள்!
ஓவியம்; தமிழ்

“என் நண்பன் இதே ஊரில் அரிசி கடை  திறந்திருக்கான். அரிசி பற்றிய விவரங்கள் தெரிந்தவரை அவன் தேடிட்டு இருக்கான். உங்க நினைவு வந்தது. நீங்க அங்க வந்தீங்கன்னா உங்க கஷ்டம் தீருங்க. முழு நேரம் கடையைப் பார்த்துகிட்டாப் போதும். மாசச் சம்பளம் தந்திடுவான். அவன் வெளிநாட்டு கம்பெனியில் வேலையில் இருக்கான்!" என்று கூறியவாறே தன் நண்பனின் முகவரியைத் தந்துவிட்டு, "சரிங்கய்யா, நான் வர்றேன்" என்று கூறி கிளம்பினான் குமரன்.

“அல்லி...திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை.”

“இல்லீங்க. இது  நீங்க செய்த நல்வினைப் பயன்தாங்க!”

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com