முழங்கால் வலி என்று இனி முனக வேண்டாம்... Shri Bone & Joint Clinic செல்லலாம்!

Shri Bone & Joint Clinic - Dr.Shriram Krishnamoorthy
Shri Bone & Joint Clinic - Dr.Shriram Krishnamoorthy
Published on
Kalki Strip
Kalki Strip

கடந்த 24ம் தேதியன்று, டாக்டர் ஸ்ரீராமின் 'Shri Bone & Joint Clinic', சென்னை அடையாறு இந்திரா நகரில் 'Shri Physio & Rehab' என்ற ஒரு க்ளினிக்கை வெற்றிகரமாக துவங்கியுள்ளது.

தென் சென்னைப் பகுதியில், அடையாறு இந்திரா நகரில், முதல் முறையாக, மருத்துவரின் நேரடி கண்காணிப்பில் சகல நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள சிகிச்சை மற்றும் சீரமைப்பு மையம்தான், டாக்டர் ஸ்ரீராமின் 'Shri Bone & Joint Clinic' - 'Shri Physio & Rehab Centre'.

(Technology-Advanced Rehabilitation & Wellness Centre)

Dr.Shriram Krishnamoorthy, Dr. Sindhuja
Dr.Shriram Krishnamoorthy, Dr. Sindhuja

பிரபல எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர் ஸ்ரீராம் கிருஷ்ணமூர்த்தியும், இவரது மனைவி டாக்டர் சிந்துஜாவும் இணைந்து இந்த மையத்தைத் துவங்கியுள்ளார்கள்.

முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை (Knee Replacement) , முழங்கால் ஆர்த்ரோஸ்கோபி (Knee Arthroscopy), விளையாட்டு வீரர்களுக்கு எற்படும் முழங்கால் பிரச்னைகள், கீல்வாதம் எனப்படும் Arthritis போன்ற முழங்கால், மூட்டு சம்பந்தப்பட்ட பல பிரச்னைகளுக்கு மருத்துவம் செய்வதில் டாக்டர் ஸ்ரீராம் நிபுணர்.

இங்கிலாந்து நாட்டின் பெருமைக்குரிய 'Travelling Fellowship in the United Kingdom' பட்டம் பெற்றவர்.

பல பிரபல விளையாட்டு வீரர்களுக்கு முழங்கால் பிரச்னைகளுக்கு சிகிச்சை அளித்திருக்கிறார். தற்சமயம் எம்.ஜி.எம். மலர் மருத்துவ மனையில் சிறப்பு மருத்துவராகப் பணியாற்றுகிறார்.

முழங்கால் மூட்டுகளில் ஏற்படும் வலியைப் (Osteoarthritis) போக்க, மூட்டு ஜெல் ஊசி என்னும் viscosupplementation injections சிகிச்சை,

உடலில் நோயுற்ற செல்களை மாற்றுவதற்காக, பல வகையான செல்களாக மாறக்கூடிய ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தும் ஸ்டெம் செல் சிகிச்சை (stem cell therapy)

போன்றவை மூலம் அறுவை சிகிச்சையைத் தவிர்க்க முடியும் என்கிறார் டாக்டர் ஸ்ரீராம்.

Shri Physio & Rehab மையத்தின் திறப்பு விழாவில் (24/01/2026) நீதியரசர் திரு. ஆனந்த் வெங்கடேசன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

MGM Healthcare group of hospitals இயக்குனர், டாக்டர் பிரசாந்த் ராஜகோபாலன், எலும்பியல் மருத்துவப் பிரிவின் இயக்குனர் டாக்டர் A.B கோவிந்தராஜ், MGM மலர் மருத்துவமனையின் தலைமை நிர்வாகி திரு.வேணுகோபால் பட், மற்றும் சென்னையின் பிரபல மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் பல விளையாட்டு வீரர்கள், உடல் ஆரோக்கிய நிபுணர்கள், திரைப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

  • எலும்புகள், மூட்டுகள், தசைநார்கள் போன்றவற்றின் பராமரிப்புக்கான (Orthopaedic care) நவீன மையம் இது.

  • கழுத்துப் பகுதி, தோள்பட்டை, முதுகு, முழங்கால் இவற்றில் வலிக்கான தீர்வு,

  • உடல் வலிமையை அதிகரிக்க சில பயிற்சிகள்,

  • நீச்சல் குளத்தில் தரப்படும் சிகிச்சை,

  • ரோபோடிக் உதவியுடன் தரப்படும் சிகிச்சை,

  • மருத்துவ யோகா

போன்றவை தகுந்த பயிற்சியாளர்கள், பிசியோதெரபிஸ்ட்கள் மூலம் இங்கே அளிக்கப்படுகின்றன.

ரோபோஸ்பைன் எனப்படும் அதி நவீன, செயற்கை நுண்ணறிவில் இயங்கக் கூடிய , Advanced AI-enabled Robotic Spinal Decompression முறை முதுகுவலியால் தவிப்பவர்களுக்கு மிக பாதுகாப்பான சிகிச்சை அளிக்கிறது.

கம்ப்யூட்டர் மூலம் கன்ட்ரோல் செய்யப்படும் இந்தக் கருவி, மிக மெதுவாக, முதுகுத் தண்டை இழுத்து, ஸ்பைன் டிஸ்க்குகளில் ஏற்பட்டிருக்கும் அழுத்தத்தைக் குறைக்கிறது. மிக நுணுக்கமாக, குறிப்பாக எந்த இடத்தில் வலியோ அங்கு மட்டும் செயல்படுகிறது.

மருந்துகளோ, அறுவை சிகிச்சையோ இல்லை.

நீண்ட நேரம் கணினி முன் உட்கார்ந்து வேலை செய்பவர்கள், நீண்ட நாள் கழுத்து முதுகு வலி பாதிப்படைந்தவர்களுக்கு பாதுகாப்பான சிகிச்சை இது.

மையத்துக்குள் இருக்கும் சிறிய நீச்சல் குளத்தைப் பார்த்ததும் வியப்பேற்பட்டது.

“இது தண்ணீர் சிகிச்சைக்கானது (Aqua Therapy )” என்று விளக்கம் தந்தார் டாக்டர்.

"மூட்டுக்களின் இறுக்கம், வலி, இவற்றை அதிக அழுத்தம் தராமல் குணப்படுத்தவும், அவற்றின் நெகிழ்வுத்தன்மையை (Flexibility) அதிகரிக்கவும் மருத்துவரின் நேரடிக் கண்காணிப்பில் செயல் படுவதால் இந்த தண்ணீர் சிகிச்சை நல்ல பயன் தரும்” என்றார்..

இன்னும் இந்த மையத்தின் சிறப்பம்சங்கள்:

  • குழு உடற்பயிற்சி (Group Excersise)

  • குழந்தைகளுக்கான நிமிர்ந்த பாஸ்சர் (Posture)

  • வயதானவர்கள், கீழே விழுந்துவிடாமல், பேலன்ஸ் செய்து நடப்பதற்கான பயிற்சிகள்,

  • காயம் ஏற்பட்டால் மீண்டு வந்து விளையாட்டுக்களில் ஈடுபடுவது.

  • முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு, அறுவைக்கு முன்னும் பின்னும் தேவையான தகுந்த பராமரிப்பு தருவது (pre- and post-surgical rehabilitation),

  • முதியோருக்கு மற்றும் பெண்களுக்கான பிரத்யேக பிசியோதெரபி,

  • மன நல மருத்துவர்கள் மூலம் மன நலத்தைப் பேணுதல்

என பல சிகிச்சை முறைகளும் இங்கே ஒரே இடத்தில் அளிக்கப் படுகின்றன.

“பாதிப்பு என்று வரும் ஒவ்வொருவரிடமும் தனிப் பட்ட கவனம் எடுத்து சிகிச்சை தரும் எங்களது குறிக்கோள், நோயாளிகளுக்கு வலியிலிருந்து விடுபட சிகிச்சை தருவது மட்டுமல்ல, பாதுகாப்பான முறையில் குணமடைதல், உடல் வலிமையோடு நீண்ட காலம் நலமாக இருத்தல் இவையே...”

என்று கூறுகிறார்கள் டாக்டர் ஸ்ரீராம், டாக்டர் சிந்துஜா இருவரும்.

Shri Physio & Rehab தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:

044-45055509, 93636 00206

Shri Bone & Joint Clinic
Shri Bone & Joint Clinic

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com