
குழந்தைப் பருவத்திலேயே மனிதனுடைய குணங்கள் முற்றிவிடுகின்றன. எனவே, ஒரு மனிதன் சுகப்படுவதற்கும் அல்லது வாழ்க்கை கெட்டு துக்கப்படுவதற்கும் குழந்தைப் பருவத்தில் அவனை வளர்த்த தாய் தகப்பன்மார்களின் செயலே காரணமாகின்றது. அறியாமையால் குழந்தைகளின் நல் வளர்ச்சியைக் கெடுத்துவிட்டு, பிறகு படும் துன்பங்களுக்கு வேறு காரணங்களைக் கற்பித்துக்கொள்ளுகிறோம். ஐந்து ஆண்டு முடிந்தபிறகுதான் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்து வாத்தியாரிடம் அனுப்புகிறோம். பாவம், வாத்தியார் என்ன செய்யமுடியும்? ஏதோ செய்யப் பார்க்கிறார். ஆனால், அதனால் இன்னும் கொஞ்சம் கெடுதலேயொழிய நன்மை உண்டாவதில்லை.