
கையைச் சுட்டுக்கொள்ளுவதும் வெட்டிக்கொள்ளுவதும் விழுந்து காயப்படுவதும் குழந்தைக்கு இயற்கை. இதை முழுதும் தவிர்க்க முடியவேமுடியாது என்பதைப் பெற்றோர்கள் மனதில் நிச்சயம் செய்துகொள்ள வேண்டும். வலி உண்டாவதினால் ஒன்றும் பிரமாதமில்லை. குழந்தைக்கு வலி யனுபவம் அவசியம். எவ்வாறு தேகத்தை உபயோகிக்கவேண்டும் என்பதை வலி அனுபவத்தினால்தான் குழந்தை தெரிந்துகொள்ளமுடியும்.
அவ்வப்போது சிறு காயங்கள் உண்டாகிப் பொறுத்துக்கொள்ளுவது குழந்தைக்கு ஒரு முக்கியமான படிப்பேயாகும். நம்முடைய குழந்தையின் உடம்பில் காயமே உண்டாகாமல் பாதுகாப்பது இயலாத காரியம். அவ்வாறு பாதுகாக்க முயற்சி செய்வதினால் குழந்தைக்கு நஷ்டமே யொழிய லாபமில்லை.