அடேங்கப்பா! மருத்துவத் துறையில் இத்தனை வாய்ப்புகளா? இங்கே 14 பார்ப்போமா?

Six medical Representatives
Six Peoples

மருத்துவத் துறையானது எண்ணற்ற தொழில் வாய்ப்புகளைக் கொண்ட ஒரு பரந்த, பரபரப்பான நகரம் போன்றது. புறாக்களைப் போல் படபடக்கும் வெள்ளைக் கோட்டுகள், கழுத்தில் தொங்கும் ஸ்டெதாஸ்கோப்புகள்(stethoscopes), காற்றில் கிருமி நாசினியின் வாசனை என்று ஆரோக்கியத்தை பேணி காத்து நோய்களை குணப்படுத்தும் இந்த பரபரப்பான உலகத்தை பற்றி தெரிந்து கொள்வோம்

டாக்டர்:

மருத்துவத்துறையின் ராக் ஸ்டார்ஸ் என்று பார்க்கப்படும் ‘டாக்டர்கள்’. ஒரு நோயை கண்டறிந்து, அதற்கு தேவையான மருந்தை பரிந்துரைத்து, விலைமதிப்பற்ற உயிர்களை காப்பாற்றுகிறார்கள். பின் அறுவை சிகிச்சை நிபுணர்கள் என்ற இக்கட்டான பாத்திரத்தில், எல்லோரின் வாழ்வில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

செவிலியர்(Nurse):

அதிகம் பேசப்படாத ஹீரோக்கள் என்று கூறலாம். இவர்கள் தான் ஒரு மருத்துவமனைகளின் இதயத் துடிப்புகள், மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு உறுதுணையாக இருப்பதிலிருந்து, நோயாளிகளை ஆறுதல் படுத்துதல் மற்றும் மருத்துவர்களின் கையெழுத்தைப் புரிந்துகொள்ளுதல் என்று 360 டிகிரி, 24*7 சுழன்று கொண்டிருப்பவர்கள்.

ஹெல்த்கேர் நிர்வாகி(Healthcare Administrator):

மருத்துவமனைக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை முன்கூட்டியே திட்டமிடுபவர்கள். அவர்கள் மருத்துவமனைக்கு தேவையான விஷயங்கள், மற்றும் காப்பீட்டு நிறுவனங்களை நிர்வகிக்கிறார்கள். விரிதாள்கள்(spreadsheets) போட்டு மொத்த டேட்டாவையும் தங்கள் விறல் நுனியில் வைத்திருப்பார்கள், கூட்டங்கள்(meetings) ஏற்பாடு செய்தல், மற்றும் அவ்வப்போது ஏற்படும் நெருக்கடிகளை கையாண்டு நேர்த்தியுடன் நிர்வகித்தலுக்கான சக்தியை பெற்றவர்கள்.

மருத்துவ தொழில்நுட்பவியலாளர்(Medical Technologist):

ஒவ்வொரு மருத்துவமனைகளில் செயல்படும் ஆய்வகங்களை நிர்வகிக்கக் கூடியவர்கள். அவர்கள் இரத்தம், சிறுநீர் மற்றும் பிற உடல் திரவங்களை நுண்ணோக்கிகளின்(Microscopes) உதவியோடு பகுப்பாய்வு செய்து, நோயாளிகளின் நல்வாழ்வில் பெரும்பங்காற்றுகின்றனர்.

மருந்தாளுனர்(Pharmacist):

ஒவ்வொரு மருந்துகளின் செயல்பாடுகள், அதன் பக்க விளைவுகள் என்று அனைத்தையும் வரும் நபர்களிடம் எச்சரித்தும், வழிகாட்டியாகவும் இருக்க வேண்டிய ஒரு முக்கியமான பாத்திரம். சொல்லப்போனால் மருத்துவத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையில் இருக்கும் ஒரு பாலம் போல இருப்பவர்கள்.

கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்(Radiology Technologist):

X-ray visionaries. அவர்கள் எலும்புகள், மற்றும் உறுப்புகளில் ஏதேனும் வித்தியாசமான தோற்றங்கள் அல்லது மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதா என்பதை கண்டறிய நேர்த்தியாக படங்களை பிடிப்பவர்கள். தேவைப்பட்டால் அடுத்த கட்டத்திற்கான சிகிச்சைக்கு நம்மை நகர்த்த உணர்த்தும் ஒர் உன்னத பணியை செய்யகூடியவர்கள் .

உடல் சிகிச்சையாளர்(Physical Therapist):

காயங்களில் இருந்து மீளவும், தசைகளை மீண்டும் நடனமாட வைக்கவும் என சில நுணுக்கங்களை பற்றி நன்கு அறிந்தவர்கள். நம்முடைய எலும்புகள் மற்றும் தசைகளோடு நேரடியாக இல்லாமல், மறைமுகமாக தொடர்புகொண்டு சரிசெய்வதில் வல்லவர்கள் இவர்கள்.

தொழில்சார் சிகிச்சையாளர்(Occupational Therapist):

காயமடைந்தவர்களுக்கு வாழ்க்கைப் பயிற்சியாளர்களாக இருப்பவர்கள். உடல் செயல்பாடு அளவில் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வில் மிகப்பெரிய ஒளியை வரவைப்பார்கள். அவர்கள் மனதில் தைரியத்தை வரவைப்பதிலிருந்து அனைத்திலும் பக்கபலமாய் இருப்பார்கள்.

இதையும் படியுங்கள்:
அரசு வேலையில் சேர விருப்பமா? என்னென்ன துறைகள் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன?
Six medical Representatives

பேச்சு-மொழி நோயியல் நிபுணர்(Speech-Language Therapists):

இவர்கள் ஒரு வார்த்தை மந்திரவாதிகள் போன்றவர்கள். காரணம் வாய் பேச முடியாதவர்களுக்கு வாய்ப்பிருந்தால் பேச்சை வரவழைப்பது, உச்சரிக்க கஷ்டமாக இருக்கும் வார்த்தைகளை எவ்வாறு சுலபமாக உச்சரிப்பது போன்ற விஷயங்களை கற்றுக் கொடுப்பதில் வல்லமை மிக்கவர்கள்.

மருத்துவ இல்லஸ்ட்ரேட்டர்(Medical Illustrator):

‘பிக்காசோ படம்’ போன்று நம் உடலை அக்குவேறு ஆணிவேராக பிரித்து டிஜிட்டலாக எடுத்துரைப்பவர்கள். நம் மொத்த உடல் வரைபடங்கள், அறுவை சிகிச்சை வழிகாட்டிகள் மற்றும் 3D மாதிரிகள் போன்று சில விஷயங்களை உருவாக்கி சிகிச்சை முறைகளை தத்துரூபமாக எடுத்துரைப்பவர்கள் இவர்கள் தான்.

மருத்துவ ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர்(Clinical Research Coordinator):

ஒரு நோயாளியை சேர்ப்பதில் இருந்து, அவர்கள் எதிர்கொள்ளும் அனைத்து சிகிச்சையின் வரலாற்றை ஒன்றிணைத்து ஒரு டாக்குமென்ட்டாக (Document) தயார் செய்து மருத்துவமனைக்கு ஒரு நகல், மற்றும் நோயாளிகளுக்கு தனியாக ஒரு நகல் என்று கொடுக்கும் முக்கியமான வேலையை செய்பவர்கள்.

மருத்துவ எழுத்தாளர்(Medical Writer):

அவர்கள் சிக்கலான மருத்துவ வாசகங்களை(Medical terms) படிக்கக்கூடிய உரைநடையில் மொழிபெயர்க்கிறார்கள். அவர்களின் மை தான் நம் மனதை ஒருநிலைப்படுத்தி முழு திருப்தியோடு நம் மருத்துவ கட்டணத்தை செலுத்த வைக்கிறது.

அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர் (Emergency Medical Technician)(EMT):

ஆம்புலன்ஸ் ஓட்டுபவர்களோடு சேர்ந்து பயணித்து பல உயிர்களை காப்பாற்ற கூடியவர்கள். இவர்கள் விபத்து நடைபெற்ற இடங்களுக்கு முடிந்தவரை வேகமாக சென்று, முதலுதவி கொடுப்பதிலிருந்து நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வரும் வரை, அந்நோயாளியை சுயநினைவோடு ஒரு நிலைபடுத்த என்னென்ன செய்யவேண்டுமோ அனைத்தையும் செய்யக்கூடியவர்கள். சுருக்கமாக சொன்னால் ‘இவர்கள் தான் போகும் உயிரை எமனிடம் இருந்து இழுத்து பிடிப்பவர்கள்’.

மருத்துவ பில்லிங் நிபுணர்(Medical Billing Specialist):

இவர்கள் தான் அடுத்த கட்டத்திற்கு செல்லலாமா என்று உத்தரவு கொடுப்பவர்கள். எப்படி ரயிலில் ‘ஸ்டேஷன் மாஸ்டர் சிக்னல் கொடுத்தால் தான் ரயில் கிளம்புமோ’ அதுபோல் சம்பந்தப்பட்ட நோயாளி கட்டணம் செலுத்தி விட்டார் இனி ஆகவேண்டிய வேலையை பாருங்கள் என்று சேதி சொல்பவர்கள் இவர்கள் தான். மேலும் காப்பீட்டு நிறுவனங்களுடான தொடர்புகள் என அனைத்தையும் நிர்வகிக்க கூடிய முக்கியமான பொறுப்பு இவர்களுடையது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com