கட்டிடம்...
கட்டிடம்...

கட்டடம், கட்டிடம் - எது சரி?

ட்டு + இடம் = கட்டிடம் என்றால் Site / Plot. அதாவது, கட்டுவதற்கு உகந்த இடம். கட்டும் இடம். எனவே, கட்டிடம் என்பது கட்டுமானத்திற்குரிய இடத்தைக் குறிக்கும். கட்டுமானத்திற்கான இடம், நிலம், மனைதான் கட்டிடம்.

ஆனால், பலர் அறியாமையால், இரண்டையும் குழப்பிக்கொண்டு கட்டடத்தையும் 'கட்டிடம்' என்று பிழையாகச் சொல்கிறார்கள்.

கட்டு + அடம் = கட்டடம் - என்றால் BUILDING / Flat. கட்டடம் என்பது கட்டுமான வடிவம் என்ற பொருள் தரும். செங்கற்களை ஒன்றின்மீது ஒன்றாக ஒரே மாதிரி அடுக்கிக் கட்டுவதுதான் கட்டுமானம். அடுக்கடுக்காகக் கட்டி எழுப்பப்படும் கட்டுமானம்தான் கட்டடம். (Buildings).

கட்டு - என்றால் கட்டமைத்தல், உருவாக்குதல். ஆங்கிலத்தில் to construct என்று சொல்வர். (Con + Struct > Structure).

தமிழ் மொழியில்... அடுத்தடுத்து இருப்பது, அடுக்கடுக்காய் உயரமாக எழுப்புவதால் - அடம் என்று பெயர் கொண்டது.

அடு + அம் = அடம்.

அடுத்தல் = ஒன்றன்மேல் ஒன்றாய்ச் சேர்த்தல்.

அடு > அடுக்கு = அடுக்கம் என்பது வரிசை.

அடுத்ததாக அமைவது = அடுக்கம்.

அடுக்கல் = அடுக்கு மாடி.

அடுக்கல் = ஒன்றன்மேல் ஒன்றாக வைத்தல், அடுக்கு, குவியல், அடுக்கடுக்காய் அமைந்த மலை.

அடம் > அடுக்கு = அடுக்கமான வடிவத்தைக் குறிக்கும்.

அடு >  அடுக்கு. ஒன்றன் பின் ஒன்றாய் அடுத்து இருப்பது அடுக்கு என்றாகும்.

அடுக்குதல் = ஒன்றன்மேல் ஒன்றாக வைத்தல்,

வரிசைப்பட வைத்தல்.

அடுக்கு அடுக்காய் = கட்டுக்கட்டாய் வரிசைவரிசையாய்.

Apartment - என்பதை அடுக்ககம். அடுக்குமனை, அடுக்கல், அடுக்குமாடி என்று சொல்லலாம்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com